உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

505 12 பெரியார் பணிகளின் விளைவு எறும்பூரக் கல்லும் தேயும். வேழம் நடந்தால் தேயாமல் இருக்கமுடியுமா? புரட்சி வேழமாக விளங்கிய பெரியார், நாட்டின் நாலா பக்கங்களிலும் உலா வந்து மிளிறியதால் நெடுங்காலமாக உறைந்துகிடந்த பல மூடநம்பிக்கைகளும் பொருளற்ற பழக்க வழக்கங்களும் உடையத் தொடங்கின. அறுவடை 'உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே, நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வரவேண்டும்' என்னும் தனது குறிக் கோளை அடைய வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். அவர் எங்கோ ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு, தம்மை நாடி வந்தவர்களுக்கு மட்டும் புரட்சிக் கருத்துகளை எடுத்துரைப்பதோடு நின்றாரில்லை. மனதில் பட்டதை எழுத்தில் வடித்து, அச்சாக்கி, வெளியிட்டதோடு அமைதி கொள்ளவில்லை பெரியார். தற்குறிகள் நிறைந்த நாட்டில் எழுத்தில் வருவதைப் படிக்கும் ஆட்கள் சிலரே. மாறாக, சிங்கத்தின் குகைக்குள்ளே புகுந்து போராடுவதைப்போல், காலமெல்லாம் செயல்பட்டார் பெரியார். தமிழ்நாட்டில் அவர் கால்படாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு சூறாவளிப் பயணம் செய்துகொண்டு இருந்தார். புரட்சிக் கருத்துகளை, மணிக்கணக்கில் விதைத்தார். கேள்விக் கணைகளை வரவேற்பதில், அவற்றை கொள்கை விளக்கத்திற்கான நல் வாய்ப்புக்களாகப் பயன்படுத்தி, பதில் சொல்வதில், பெரியார் இணையற்று விளங்கினார். இச் செயல்கள் பேரலைகளை எழுப்பின. ஏமாந்த காலத்தே ஏற்றங்கொண்டோர், பாய்ந்தனர்; நரிகளென ஊளையிட்டனர்; வேங்கையெனப் ஆதிக்கப்புரிகள் ஆட்டங் காண்பதைக் கண்டு அஞ்சி, அப்பாவி மக்களை, ஏவி விட்டனர்.