பெரியார் பணிகளின் விளைவு 213 படுத்தி வந்தார், தந்தை பெரியார். உழுது பரம்படித்து வைத் திருந்த தமிழ்நாட்டு வயல்களில், கல்விப் பயிரைச் செழிக்க வைத்தார், கர்மவீரர் காமராசர். பகல் உணவு என்னும் நீரைப் பாய்ச்சினார்; இலவசக் கல்வி என்னும் உரத்தையிட்டார்; சீருடை என்னும் பூச்சிக்கொல்லியைத் தெளித்து வந்தார். எல்லா சாதிப் பையன்களும் பெண்களும் படிக்கப்போனார்கள்; முன்னர் காணாத அக்கறையோடு படித்தார்கள். நன்றாகத் தேர்ச்சி பெறவும் தலைப்பட்டார்கள். இவ்வளர்ச்சி பொதுக் கல்வியோடு, பள்ளிக் கல்வியோடு நிற்கவில்லை. கல்லூரிக் கல்விக் கும் தொழிற் கல்விக்கும் பரவிற்று. பள்ளி இறுதிவரை இருந்துவந்த இலவசக் கல்வி முறையை 1969இல் புகுமுக வகுப்பிற்கும் விரிவுபடுத்தி முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஆணையிட்டார். இது ஏழைகளின் மேல் படிப்பிற்கு தூண்டுகோலாயிற்று. முன்னர், மேல்சாதிக்காரர் களே அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அலுவல் ப போவார்கள். இப்போது பலசாதிக்காரர்களும் பிற நாடுகளில் பணிபுரிகிறார்கள். பற்றி இன்று தமிழ்நாட்டில் வடமொழி கற்பிக்கும் பள்ளிகள் கல்லூரிகள் நீங்கிய மற்ற எல்லா கல்வி நிலையங்களிலும் 'தாழ்த் தப்பட்டவர்கள்' என்று அழைக்கப்பட்டவர்கள், படிப்பதைக் காணலாம். வடநாட்டில் எதிரொலி இன்றைக்கும் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பின்தங்கிய வகுப்பாருக்கு நூற்றுக்கு இருபது இடங்களை கல்லூரிப் படிப்பிலும் வேலை வாய்ப்புகளிலும் ஒதுக்க முனையும் போது சொல்லிமுடியாத கலவரங்கள் நடக்கக் காண்கிறோம். இங்கோ அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பே, வகுப்புரிமை விரிந்த அளவில் செயல்பட்டது. புதிய அரசியல் சட்டம் அதை ஓரளவு முடமாக்கியது. இருப்பினும் பெரியார் கிளர்ச்சி செய்து, பின் தங்கியவர்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யலாம் என்னும் திருத்தத் தைக் கொண்டுவரச் செய்து வெற்றிகண்டார். உயர் கல்வியில் முன்னேற்றம் அதன் விளைவாக, தொழிற் கல்வியிலும் வேலைகளிலும் பின் தங்கியவர்களுக்கும் பெருமளவு நீதி வழங்க முடிந்தது. 1975ஆம் ஆண்டு எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம். சேர்க்கைகளில், தாழ்த்தப்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/225
Appearance