அன்றைய சூழ்நிலை 11 அப்போதைய நடைமுறைப்படி, சென்னை மாகாண ஆளுநர், திருவாங்கூர் இராச்சியத்தின்மேல் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். எனவே, வெள்ளைப்பாதிரி, சென்னை ஆளுநர் சர் சார்லஸ் டிரெவிலியனுக்கு இதைப்பற்றி எழுதினார். பெண்கள் கோரிக்கையை ஆதரித்துப் பரிந்துரைத்தார். ஆளுநர் என்ன செய்தார்? மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணியார். இந்துக் களின் பழக்க வழக்கங்களில் தலையிடுவதில்லை என்று இந்தியர் களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதி எங்கள் நெஞ்சில் பசுமை யாகவே இருக்கிறது. மறந்தும் அவ்வாக்குறுதியிலிருந்து இழை யளவும் விலக நாங்கள் விரும்பவில்லை. ஆயினும் இந்த நாகரீக காலத்தில் எங்காவது எந்த இனப் பெண்களாவது மார்பைத் திறந்து காட்டிக்கொள்ள இசைவார்களா? அப்படி நடக்கவேண்டு மென்று கட்டாயப்படுத்துவது நன்றாயிருக்குமா என்பதை மன்னர் பிரானே யோசித்து முடிவுசெய்ய விழைகிறேன். அதற்குமேல், காட்டுமிராண்டி முறையை நிலைநிறுத்த எந்த மன்னருக்குத் துணிவு வரும்! 'நாஞ்சில் நாட்டு ஈழவப் பெண்கள் இடுப்பில் முண்டோடு, மார்பில் இரவிக்கையும் போட்டுக்கொள்ளலாம். ஆனால் உயர் சாதிப் பெண்களைப்போல் உடுத்தக்கூடாது.' இப்படி மன்னர் ஆணையிட்டார். நாகர்கோவிலில் ஈழவப் பெண்கள், இந்த ஆணைக்கு மேலே போனார்கள். உயர்சாதிப் பெண்களைப்போல், இரவிக்கை அணிந்ததோடு, முண்டுக்குப்பதில் சேலையணிந்துகொண்டு கடைத்தெருவிற்கு வந்தார்கள். 'ஆ! எத்தனை பெரிய அக்கிரமம்! அதை தெய்வம் கேட்கட்டும்; நின்று கொல்லட்டும். அரசன் அன்று கொல்ல வேண்டாமா? போயும் போயும் பெண்களுக்கா இவ்வளவு கொழுப்பு? பெண்கள் சட்டத்தை மீற விடலாமா? நாமே ஒரு கை பார்த்துவிடுவோம். இப்படி எண்ணினார்கள், உயர்சாதி இந்துக்கள். காஷ்மீரில் உள்ள அவர்களில் ஒருவருக்குத் தேள் கொட்டினால், கன்னியா குமரிக் கரையிலிருப்பவருக்கும் நெரி கட்டுமே! நொடியில் 'பெரிய சாதிக்காரர்கள் திரண்டு வந்தார்கள்; சும்மா வரவில்லை; கம்போடும் கழியோடும் வந்தார்கள்; ஈட்டியோடும் கடப்பாறை யோடும் பாய்ந்துவந்தார்கள். ஈழவப் பெண்களை விரட்டியடித் தார்கள். ஈழவர்களுக்கு மானமும் இருந்தது; ஆண்மையும் இருந்தது. அவர்கள் கூடி எதிர்த்தார்கள். சண்டை முற்றிற்று; வன்முறை வளர்ந்தது; அடிதடி மிகுந்தது; நகர் முழுவதும்
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/23
Appearance