பெரியார் பணிகளின் விளைவு 219 இத்தகைய சீர்திருத்தங்களை இளைஞர்கள் போதிய துணிவோடு முன்னிலும் அதிகமாக நடைமுறைப்படுத்துவார்களாக. குடும்பக் கட்டுப்பாடு 'அளவான குடும்பம் வளமான வாழ்வு' என்னும் கொள்கையை தென்னகத்துப் பொதுமக்களிடையே பரப்பிய முன்னோடி தந்தை பெரியார் ஆவார். அப்போது கிண்டல் செய்தவர்களே, ஆட்சி யாளராக மாறியபோது, அதைத் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்தது, பெரியாரின் மற்றோர் கொள்கைக்கு வெற்றியாகும். வெவ்வேறு சமய நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கையில்லாத வர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவான அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் கடவுள் படங்கள் இருத்தலாகாது, பூசைகள் நிகழ்த்தலாகாது என்று பேரறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது ஆணையிட்டார். பல பொது இடங்களில் இவ்வாணை செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தமூட்டுவதாகும். பொதுக்கூட்டங்களின் தொடக்கத்திலாவது முடிவிலாவது அரசு வாழ்த்து, கடவுள் வணக்கம், தலைவர் வணக்கம் பாடக்கூடா தென்ற தன்மான இயக்க முடிவு, அவ்வியக்கத்திற்கு அப்பால் செயற்படவில்லை. எத்தனையோ சிலை திருட்டுகள் வாரந்தோறும் வெளியா கின்றன. தமிழ்நாட்டு நாத்திகர் எவரும் எந்த சிலைத் திருட்டு குற்றத்திற்கும் ஆளாகவில்லை என்பது, பெரியாருக்குப் பெருமை ; பகுத்தறிவு இயக்கத்திற்குச் சிறப்பு நாத்திகர்கள் மற்றவர்களை விட ஒழுக்கசீலர்களாக, உண்மையாளர்களாக, நேர்மையாளர் களாக இருக்கவேண்டுமென்று, தந்தை பெரியார் கற்றுக்கொடுத்த பாடத்தை தன்மான இயக்கத்தவர்கள், கசடறக் கற்றுக்கொண் டார்கள்; கற்றபடி நிற்கிறார்கள் என்பதற்குச் சான்றாக விளங்கு கிறது. சமய சிலை கடவுள் நம்பிக்கை கோயில் வழிபாடு, இவைகளைப் பொறுத்த மட்டில் இலட்சக்கணக்கானவர்கள் இந்நம்பிக்கையிலிருந்து விடு பட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் கோடிக்கணக்கானவர்கள் நம்பிக்கையை விட்டபாடில்லை. வணக்கத்தை ஒதுக்கியபாடில்லை. இவற்றிற்காக, பொருளையும் நேரத்தையும் சிந்தனையையும் பழையபடியே பாழாக்கி வருகிறார்கள். தாமே, நேரே, பொருள் படாடோபமின்றி, வழிபடும் அளவுக்குக்கூட பெரும்பாலான ஆத்திகர்கள், தெளிவோ, துணிவோ பெற வில்லை.
பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/231
Appearance