உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 புரட்சியாளர் பெரியார் விடுவேனோ என்னவோ' என்று வெளிப்படுத்தினார். இதைக் கண்ணுற்ற அறிஞர் அண்ணா, அமெரிக்காவிலிருந்து கவலையோடு தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியை சமுதாயத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத் திருக்கிறது. நான் அறிந்த வரையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை, அதுவும் நமது நாட்டில். ஆகவே, சலிப்போ, சலிப்போ, கவலையோ கொள்ளத் தேவையில்லை' என்று எழுதினார். பெரியார், சமதர்மக் கொள்கையைப் பரப்பி, வளர்த்து, மக்களின் ஆதரவைப் போதிய அளவு பெற்று, 'எல்லார்க்கும் எல்லாம் இருப்பதான திசை நோக்கி' நம் நாட்டை நடத்திச் செல்லும் பணியில் வெற்றிபெறுவதற்கு முன்பே மறைந்து விட்டார். ஈராயிரம் ஆண்டுகளாகத் தூங்கிக் கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பியவர் தன்மான இயக்கத் தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி ஆவார். அடிமையிலும் இழிவிலும் நெடுங்காலம் ஆழ்ந்து கிடந்ததால், தன்மானமே இன்றி, மரக்கட்டைகளாகக் கிடந்த பார்ப்பன ரல்லாதாரை உலுக்கி, 'நீ மனிதன், பகுத்தறிவு பெற்ற மனிதன். ஆகவே பகுத் தறிவுக்கே முதல் இடம் கொடு. கடவுளை மற; மனிதனை நினை. பிறப்பால் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை. ஆணும் பெண்ணும் சமம்; மனைவி, மலிவான வேலைக்காரியல்ல; வெறும் விளையாட்டுப் பொம்மையல்ல; நகைமாட்டியல்ல; வாழ்க்கைத் துணை. உயிருள்ள, உரிமையுள்ள வாழ்க்கைத் துணை. எனவே, இருவரும் தோழமையோடு வாழுங்கள்' என்று அய்ம்பது ஆண்டுகள்போல அம்பதாயிரம் கூட்டங்களிலாவது அறிவு புகட்டிய பகுத்தறிவுப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஆவார். "சமதர்ம வாழ்வே மனித வாழ்வு; முழு வாழ்வு; எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் வாழ்வு. சமதர்ம முறையின்கீழ் மட்டுமே மனிதன் சமத்துவ வாழ்வு வாழ முடியும்' என்பதை நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக விளக்கி விளக்கி ஒளிவிட்ட சம தர்ம ஞாயிறு, தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமி ஆவார். சிந்தனையிலே, பேச்சிலே, எழுத்திலே, கனல் கக்கி, இரும்பாக இருந்தவர்களை உருக்கி, சிந்திக்க வைத்த பெரியாருக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது என்ன? பெரியாரின் தொண்டர்கள் எத்தகையோர்? அவர்கள் எத்தகைய தியாகத்திற்கும் தயங்காத