உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இயக்கப் பணி 53 செலவு செய்ததில் பகுதியல்ல, கால்வாசி கொடுத்தால்கூட மகிழ்ச்சியடைந்திருப்பேன் என்றாலும் இதன் மூலம் பின் சந்ததி இது ராமசாமி சிலை என்று சொல்லாது சாமி இல்லை என்று சொன்னவன் சிலை என்று சொல்லும், அதனால் நம் சந்ததியாவது அறிவு பெற வாய்ப்பு ஏற்படும் என்றே கருதுகிறேன். மடமை, முட்டாள்தனம், மூடநம்பிக்கை, அறிவற்றத் தன்மை, இந்தக் கோயில், கடவுள் ஆகியவைகளுக்கு எதிராக ஒரு எதிர்ப்புக் காரியம் செய்தாகவேண்டும். நாம் ஒருவர் மட்டும் பலன் பெற்றால் போதும், மற்றவன் எப்படியானால் என்ன என்கின்ற எண்ணம் நமது மக்களுக்கு இருக்கக்கூடாது, அந்த எண்ணத்தி னாலேயே நாம் இழி மக்களாக, சூத்திரர்களாக, நாலாம் சாதி மக்களாக இருக்கிறோம். நமது சமுதாயம் பலன் பெறவேண்டும். நாம் செய்கிற இக்காரியத்தால் நமது சமுதாயத்திற்கு ஏற்படும் பலன் என்னவென்பதை சிந்திக்க வேண்டும், நம் மக்களுக்கு சமுதாய உணர்வு ஏற்பட வேண்டும். நமது மக்களை திருப்ப இந்த சிலை, கல்வெட்டு இவைகள்தான் நிலையான வழியாகும். ஒவ்வொரு ஊரிலும் கடவுள், மதம் ஆகியவைகளை மறுத்து கல்லடித்துப் போடவேண்டும். அவன் கோபித்துக்கொள்வானே, இவன் கோபித்துக்கொள் வானே என்கிற அச்சம் கூடாது. நம் எதிரிகள் (பார்ப்பனர்கள்) நாம் கோபித்துக்கொள்வோமே என்று எதை விட்டுவிட்டான்? பூனூல் மாட்டுவதை விட்டானா, வேறு எதையாவது விட்டானா? நம் சமுதாயத்திலிருக்கிற இழிவைப் பற்றிய கவலையில்லாமல் அரசியல் பெயரால் அயோக்கியர்களெல்லாம் வயிறு வளர்த்துக் கொண்டும், சில காலிப் பசங்களெல்லாம் அதன் மூலம் பலன் அனுபவித்துக்கொண்டுமிருந்தால் போதுமா? நம் இழிவு, மடமை, முட்டாள் தனம் இவை நீங்கி நாமும் மற்ற உலகமக்களைப்போன்று இழிவற்று, அறிவு பெற்று சமத்துவமாக வாழவேண்டாமா?' கல்வி வாய்ப்பின்மை அறிவுடையார் எல்லாம் உடையார்: அவ்வறிவினைப் பெறும் வழி கல்வி. இப்படி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் அறுதி இட்டுக் கூறினார். ஈ.வே. ராமசாமி தம் வாழ்நாள் முழுவதும் இவற்றை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வந்தார். பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த காலத்தில், எத்தனையோ பள்ளிக்கூடங்களில், அதுவும் நாட்டுப்புறப் பள்ளிக்கூடங்களில், ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்கவேமாட்டார்கள். ஆகவே