உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இயக்கப் பணி 63 அடுத்து 1931இல் விருதுநகரில் மூன்றாவது மாநாடு ஆர்.கே. சண்முகம் தலைமையில் கூடியது. தீண்டாமை என்பது இந்து சமூகத்திலுள்ள சாதிகளையும் பிடித்த நோயென்றும், தீண்டாமை ஒழியவேண்டுமானால் பிராமணீயம் ஒழியவேண்டு மென்றும் அம் மாநாடு முடிவு செய்தது. உலக வியப்பு சகல தன்மான இயக்கத்தின் தீவிரக் கொள்கைகளின் எதிரொலி உலகெங்கும் கேட்டது. இங்கிலாந்தில், ஆர். பி. ஏ. (ரேஷனலிஸ்ட் பிரஸ் அசோசியேசன்) என்னும் அமைப்பு-பகுத்தறிவு வெளியீட்டுக் கழகம்-‘லிட்டரரி கைய்ட்' (அறிவு விளக்கம்) என்னும் திங்கள் இதழை நடத்திவந்தது. 1931ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவ் விதழில் 'இந்தியாவில் அறிவு இயக்கம்' என்னும் கட்டுரை வெளியாயிற்று. அக்கட்டுரையின் ஒரு பகுதி இதோ இந்திய வரலாற்றில் வியக்கத்தக்கபடி, சென்ற அய்ந்து ஆண்டு காலத்தில் ஒரு பெரிய புத்துணர்ச்சி வெள்ளம் இருகரையும் புரண்டு போய்க்கொண்டிருக்கிறது. அதாவது, சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் சென்ற அய்ந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டு, மக்களால் நெடுங் காலமாக மரியாதை செய்யப்பட்டுவந்த கருத்துகளுக்கும் நம் பிக்கைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அடிப்படையிலே ஆட்டம் ஏற் படும்படி செய்துவிட்டது.' உள்நாட்டுச் செய்தி நிறுவனங்கள் எவ்வளவு தான் மூடிமறைத்தா லும், சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிகரமான சாதனையை பத்தாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வாழ்ந்தவர்கள், அடையாளம் கண்டு, உலகுக்குக் காட்டினார்கள். தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பொது உணவுச்சாலைகளையும் ஊடுருவியது. அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு இரயில்வே ஓட்டல் உட்பட தனியார் நடத்திய ஓட்டல்களி லும் சிற்றுண்டிச்சாலைகளிலும் தாழ்த்தப்பட்டோரை அனு மதிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட சாதிகளிலும் பார்ப்பனர் களுக்குத் தனியிடமும் மற்றவர்களுக்குத் தனியிடமும் ஒதுக்கி வைப்பார்கள். அம்முறையை தன்மான இயக்கம் ஏற்றுக்கொள்ள முடியுமா? முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே சிற்றுண்டிச்சாலைகளில் கடைப்பிடிக்கப்பட்ட வகுப்பு பேத முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.