உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மான இயக்கப் பணி 69 பெரியாரின் விருப்பம். அதை 11-10-1931 நாளைய 'குடி அரசு' வாயிலாக வெளியிட்டார். அதைப் படிப்போம்: 'எனது வேலையானது ராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத்தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந் தார் என்று மூட ஜனங்கள் சொல்லிக்கொள்ளவோ, எனது படத்தை பூஜையில் வைத்து பூஜிக்கவோ, தேரில் வைத்து இழுக்கவோ, கோவிலில் 'என் பேரில் விக்கிரகம் செய்து பூசை உற்சவம் செய்யவோ நான் கருதவில்லை. அந்தக் குணத்தை அடி யோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி வெளியிட்டவன். ஆகவே, என்னை அக்கதிக்கு ஆளாக்காதவர்களே எனது நண்பர்க ளாவார்கள். எனது கொள்கைகளுக்கும் துணைபுரிந்தவர்க ளாவார்கள். ஏனெனில் வண்ணான், நாவிதன், பறையன், பள்ளன், செட்டி, நாயக்கன், நாடார் என்று சொல்லப்பட்ட 'இழிகுல மக்கள் என்ப வர்கள் எல்லாம் இன்று ஆழ்வார்கள், நாயன்மார்களாகியும், பூசித்தும், உற்சவம் செய்யப்பட்டும் நாட்டுக்கோ, அச்சமூகங் களுக்கோ, ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கிறேன். அதன் பேரால் அவர்கள் கதைகளைச் சொல்லி, சிலர் வயிறு வளர்க் கின்றார்கள். சிலர் சோம்பேறிகளாய் வாழ்கின்றார்கள் என்ப தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. எந்தக் காரணத்தைக்கொண்டும் மனிதத்தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என்மீது சுமத்திவிடாதீர்கள்.' கலை உணர்ச்சி இராமாயணம் போன்ற இலக்கியங்களை, பெரியார் ஈ. வே. ராம சாமி குறைகூறுவதுபற்றி பலர் குறைபடுவதுண்டு. அத்தகைய இலக்கியங்களை கலையுணர்ச்சிக்காகவும், சொல் நயத்திற்காகவும் போற்ற வேண்டுமென்று, அடிக்கடி, இவரும் அவரும் பேசுவதுண்டு. அவர்களுக்கு என்ன பதில் சொன்னார் பெரியார் என்று பார்ப் போம்: 'நான் கலையுணர்ச்சியையும் தமிழ் உணர்ச்சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால் தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்கமுடியுமா? அதுபோல், கம்பராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான். அவைகளில் உள்ள மூடநம்பிக்கைக்கும் தமிழர் இழிவுக்கும் ஆரியர் உயர்வுக்கும் ஆதாரமானவைகளை வைத்துக் கொண்டு எப்படி அவைகளைப் பாராட்டமுடியும்?' இது பெரியார் பதில்.