உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புரட்சியாளர் பெரியார் இப்படியாக, ஈ.வே. ராமசாமியின் பேச்சிலும் எழுத்திலும் பொது உடைமைக் கொள்கை கனல் விட்டுக்கொண்டிருந்தது. இது ஆட்சியாளரை ஆத்திரமூட்டியது. தன்மான இயக்கத்தின் முதற் கவிஞராம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களில் சமதர்ம ஒளிவீசத் தலைப்பட்டது. எடுத்துக்காட்டாக 30-4-1933 நாளிட்ட 'குடி அரசில்', 'குடி அரசு ஒன்பதாம் ஆண்டு' என்னும் பாரதிதாசனின் பாடல் வெளி யிடப்பட்டது. 'போர்முகத்தில் அணி வகுக்க இன்றழைத்தாய் பொது உடமை முரசறையக் கோலெடுத்தாய் ஓர்முகத்தில் சந்தோசம் ஒன்றில் வாட்டம் உண்டாக்கும் அரசியலை விழி நெறித்தே ஊர் முகத்தில் நிற்காதே என முழக்க ஒன்பதாம் ஆண்டினிலே உயர்ந்தாய் இந்நாள் பார் முகத்தைச் சமப்படுத்த ஓகோகோ கோ பறந்தேறுகின்றாய் நீ வாழி நன்றே என்று பாரதிதாசன் வாழ்த்தினார். அக் 'குடி அர'சில் பொது உடமை இயக்கத்தின் முன்னோடி சிங்காரவேலர், 'சமதர்ம விஜயம்' என்று எழுதிய ஒரு கட்டுரையைக் காணலாம். அதில், மா. 'நமது "குடி அரசு" யாதொரு சுயநலமும் கருதாது தேசநலத் திற்கே உழைத்து வந்ததின் முக்கிய பயன்களில் நமது நாடு முழுமையும் சமதர்மப் போரொலி முழங்குவதே பெரும் பயனாகும். 'ஒரு காலத்தில் உலகம் முழுமையுமே பரவப்போகிற சமதர்ம இயக்கத்தை தமிழ் நாட்டில் இவ்வளவு சிறு காலத்தில், நாடு முழுமையும் விளங்கச் செய்துவருவது "குடி அரசின் மகத்துவமே யாகும். நமது காலத்தில், இதற்கு இணை இல்லை என்றே சொல்லலாம். 'தேசிய பத்திரிகைகளும் அயல்நாட்டார் பத்திரிகைகளும் ஒரு கூட்டத்தார் நலத்தைக் கோரி, அவர்களை ஆதரித்து வந்திருக்க, ‘“குடி அரசு" ஒன்றே ஏழைத் தொழிலாளர்பாலும் விவசாயிகள் பாலும் திக்கற்றவர்கள்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள்பாலும் பரிந்து பேசி வந்திருக்கின்றது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் பாமர மக்களை ஆதரித்துப்பேச, தமிழ் நாட்டில் "குடி அரசு' ஒன்றே உள்ளது. "எங்கும் பல்லாயிரம் மக்களது அறிவை விசாலப்படுத்தியும் பகுத்தறிவைத் தூண்டியும் மதப்பற்றையும் மதவைராக்கியத்தை