உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணாநிதி இவற்றைப் படிப்பதாலோ, கேட்பதாலோ மக்கள் அடையும் பயன்தான் என்ன? என்ன? என்று ஏன் கேட்கக்கூடாது. புராணங்களைக் கண்மூடிப் படித்து, கேட்டு, அவற் றிலே காணப்படும், கூறப்படும் அசாதாரண நிகழ்ச்சி களையும், மனித சக்திக்குப் புறம்பான அதிசயங்களையும் ஆபாச நிகழ்ச்சிகளையும் ஆண்டவன், அவதாரம், அருள் வழி கடவுள் கடாட்சம் என்று நம்பி, அதே போதை யில், மக்கள் மயங்கி, மனபல மிழந்து, தமது சக்தியால், தன்னுழைப்பால், தனது சிந்தனையால் முன்னேறாது, தான் இருக்கும் நிலையை, தரித்திர நிலையை உயர்த்திக் கொள்ள, 'பிரார்த்தனை, பக்தி-பாராயணம் ஆகியவற்றி லேயே ஈடுபட்டுச் சோம்பேறி யாகிறார்கள்! சோம்பேறியாவது மட்டுமல்ல, கையிலிருக்கும் காசையும், காலத்தையும், ஏன், கருத்தைக் கூடக் கட வுள் வழிபாட்டிற்கும், யாத்திரைக்கும், பூஜைக்குமே செலவழித்துக் கொண்டு, சத்தற்ற வாழ்வுச் சுமையை சுமக்க முடியாது சுமந்து போகிற கதியை நினைத்துக் கொண்டு 'சாவே வா, சாவே வா' என்ற வாழ்க்கை நடத்துகின்றனரே! இந்த நிலையை, மாற்றி யமைத்திட வேண்டாமா? மக்கள், மக்களாக, எதையோ நினைத்துக் கொண்டு ஏங்கி, எதிர் பார்த்துப் பார்த்து ஏமாந்தவர்க ளாகவே வாழ்ந்திடும் வாழ்வை மாற்றி, வளப்படுத்திட வேண் டாமா? 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/100&oldid=1706149" இலிருந்து மீள்விக்கப்பட்டது