கருணாநிதி அதன்படி, அவரே விடுத்த அறைகூவலின்படி நடந்து கொண்டரா, ஆச்சாரியார்? கவனியுங்கள் தோழர் களே, மிக நன்றாகக் கவனியுங்கள். அருப்புக்கோட்டைத் தேர்தல் முடிவு தெரிந்தது - தெரிந்துவிட்டது. ஆச்சாரியாரின் எதைப் பற்றிய விளக்கந்தேடி பெரும் நம்பிக்கை வைத்துப் பகிரங்க அறைகூவல் விடுத்தாரோ. அந்த அறைகூவலை மக்கள் - அத்தொகுதி வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டு தங்கள் தீர்ப்பைத் தெரிவித்து விட்டனர். ஆச்சாரியாருக்கு! காங்கிரஸ் தோற்றது- தோற்றுவிட்டது. காங்கிர சால் ஆதரிக்கப் பட்டவர் படுதோல்வி யடைந்தார். தேர்தலிலே. ஆச்சாரியாரின் அறைகூவல், முறியடிக்கப்பட்டு விட்டது, அருப்புக் கோட்டையிலே! ஆச்சாரியாரின், அகராதிப்படி, அவரது பகிரங்க அறை கூவலின்படி, ஆச்சாரியாரே, உம்மிடம் - உமது மந்திரி சபையிடம் நம்பிக்கை யில்லை என்பதைத் தெரிவித்து விட்டோம், போ - வெளியே என்று ஆச்சாரியார் மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டனர், என்பதுதானே பொருள். அர்த்தம், அருப்புக் கோட்டையில் காங்கிரஸ் தோற்றதற்கு! இதைத்தானே ஆச்சாரியார் தேர்தல் பிரச்சினை யாக்கிப் பேசி,பகிரங்கமாக, அறைகூவலாக விடுத்தார். வாக்காளரைப் பார்த்து! 21
பக்கம்:புராணப்போதை.pdf/22
Appearance