உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை என்று அறிந்து வாருங்கள் என்ற பதிலிறுத்தார் ஆச் சாரியார். உடனே சில காங்கிரஸ்காரர்கள் பறந்தனர் டெல்லிக்கு விமானமூலம். டெல்லி சென்று, காங்கிரஸ் மேலிடத்தாரைக் கலந்து வந்து மீண்டும் வேண்ட. ஆச்சாரியார் மிகவும் பிகுவோடு சட்டசபைக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தன்னை த் தேர்ந்தெடுக்க ஒப்பினார். ஆச்சாரியார் அவர்களைக் காங்கிரஸ் சட்டசபைக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர், காங்கிரஸ் சட்டசபைக் கட்சியினர். தலைவராக ஆச்சாரியாரைத் தேர்ந்தெடுத்த அதே. கூட்டத்தில் ஆச்சாரியார் அவர்களை, சென்னை கவர்னர் ஸ்ரீபிரகாசா அவர்கள் மேல்சபை அங்கத்தினராக, அவர் ஆச்சாரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு ஒரு மணி முன்னால்தான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுக் காங்கிரஸ்காரர் மனம் மிக மகிழ்ந் தனர். இதன் பின்னர், ஆச்சாரியாரின் நியமனம் பற்றிப் பலவித வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுக்கொண்டே யிருந்தன. எது எப்படி இருந்தபோதிலும் கவர்னர் அவர்கள் இராஜகோபாலாச்சாரியாரை அழைத்து மந்திரி சபை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/33&oldid=1706082" இலிருந்து மீள்விக்கப்பட்டது