கருணாநிதி அரசியல் அரிபரந்தாமனாக, ஸ்ரீபிரகாசா அவர்கள் நடந்து, ஆச்சாரியாருக்கு அபயம் அளித்திருக்கிறார் போலும். பாரதக் கதையிலே வரும், அர்ஜுனனுக்குப் பரந் தாமன் பாரதப்போரின்முன் அபயம் அளித்ததைப் போல! பாரதத்திலே ஒரு நிகழ்ச்சி! பாரதப்போர் ஆரம்ப மாகிவிட்டது. பாண்டவருக்கும் கௌரவருக்கும் இடையே போர்! போர்! போரிட நாளும் குறித்தாய் விட்டது. இந்தப் போராட்டத்திலே அரிபரந்தாமன் அவதாரமான கண்ணனைத் தன் பக்கம் துணை நிற்கும்படி கேட்டிட முதலில் துரியோதனன் புறப்பட்டு கண்ணன் வாழும் துவாரகைக்குச் சென்றான். துரியன் சென்றபோது, கண்ணன் துயில் விட்டு எழுந்திருக்கவில்லை என்பதை உணர்ந்த துரியோதனன், தூக்கத்திலிருந்து தட்டியெழுப்பித் துணை கேட்பது நெல்லதல்ல, துயில் நீங்கி எழட்டும்' என்று கண்ண னுடைய தலைமாட்டிலே (வணங்கா முடியோன் அல்லவா) அமர்ந்து காத்துக்கொண் டிருந்தான். தூங்குவது போலப் பாவனை செய்து கொண் டிருந்த கண்ணன்,- துரியோதனன் வந்ததையும், வந்த காரணத்தையும், வந்து அமர்ந்திருப்பதையும் தனது சக்தியால் தெரிந்து கொண்டான்; மாயக் கண்ணன் அல்லவா, அவன்? 41
பக்கம்:புராணப்போதை.pdf/42
Appearance