கருணாநிதி 'சரிதான், மைத்துனா, சஞ்சலம் வேண்டாம். என்று அர்ஜுனனைத் தட்டிக் கொடுத்து விட்டுத் திரும். பினான் கண்ணன். திரும்பிய மாதவன், அப்போது தான் துரியோதன னைப் பார்த்தது போலப் பாசாங்கு செய்து கொண்டே, வரவேற்று வந்த காரியத்தை வினவினான். துரியோதனன், தான் வந்த காரணத்தைக் கூறித் தன் பக்கமே கோபால கிருஷ்ணன் துணை வரவேண்டும் என்றும், தான் முதன் முதலில், அர்ஜுனனுக்கும் முன்னதாகவே வந்து காத்திருந்ததாகக் கூறினான். 'ஐயோ பாவம், முன்னாலா வந்தாய் நீ, எனக்குத் தெரியாதே, நீ தலைப்பக்கம் உட்கார்ந்து விட்டாயோ, எழுந்தவுடன் கால் பக்கமிருந்த அர்ஜுனனைத்தான் நான் முதலில் பார்த்தேன். முதலில் துணை வேண்டு மென்று என்னைக் கேட்டதும் அவன்தான். அவனுக்கு. முதலில் கொடுத்த வாக்கை எப்படி, மாற்ற முடியும். மனமார வருந்துகிறேன் உனக்குத் துணை வருவதற் கில்லையே,' என்று, வருத்தப் படுவது போல் நடித்து வழியனுப்பி விட்டாராம், மாலின் மறு பிறப்பான, மாயோன், மாதவன், யாதவன், கோபாலன், கிருஷ்ணன். கண்ணன். இது பாரதக் கதையில் ஒரு நிகழ்ச்சி! அரிபரந்தாமன் அவதாரமான கண்ணன், தனக்கு வேண்டிய, தன்னுடைய உறவினனான அர்ஜுனனுக்கு உதவ வேண்டும் என்பதற்காக முன்னால் வந்த துரியோ தன்னைத் தூங்குவது போலக் கண் மூடிக்கொண்டு 43
பக்கம்:புராணப்போதை.pdf/44
Appearance