உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை 'நான் சென்னைக்குக் கவர்னராகப் போகிறேன். மிகவும் கடினமான பொறுப்புதான். கிளைவின் வாரிசா கப் போகிறேன்,' என்ற முறையில் அவர் பேசியதாகச் செய்தி வந்திருக்கிறது பத்திரிகைகளிலே! கிளைவின் வாரிசு! என்று தம்மைக் கற்பனை செய்து பார்க்கிறார் ஸ்ரீபிரகாசா அவர்கள், தம்மைச் சென்னை யில் கவர்னராக நியமித்தவுடன்! கிளைவ், ராபர்ட் கிளைவ், இந்தியாவில் ஆங்கிலேய ரின் பிடி ஏற்பட்டிட, முதன் முதலில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் இந்தியாவில் வேரூன்றிட வித்திட்டவன் கிளைவ்! அந்தக் கிளைவின் வேலையை - வடநாட்டுப்பிடி அழுத்தமாகச் சென்னை மாகாணத்தின்மீது ஏற்பட்டிட. வழியும் வகையும் வசதியும் அமைந்திடும் முறையில், அமைத்திடும் போக்கில் - கிளைவின் வாரிசாகத் தாம் அனுப்பப்படுவதாகக் கனவு கண்டிருக்கிறார்; கனவு கண்டிருப்பது மட்டுமல்ல, அதனை நனவாக்கத்தான் சென்னைக்குப் போவதாகக் கூறியுமிருக்கிறார். கிளைவின் வாரிசாகப் போகிறேன்; கிளைவின் வாரிசாக அனுப்பப்படுகிறேன்' என்று பேசியதின் பொருள் என்ன, இதைத் தவிர? சிந்தியுங்கள் நண்பர் களே சிந்தியுங்கள்! கிளைவ், இங்கிலாந்தில் இழித்தும் பழித்தும் பேசப் பட்டவன் இளம் வயதில். முரடன், முட்டாள், முழுச்சோம்பேறி, முன்னுக்கு வரவே முடியாதவன். மூர்க்கன் என்றெல்லாம் வர்ணிக் கப்பட்டவன் சரித்திரத்தில். 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/47&oldid=1706096" இலிருந்து மீள்விக்கப்பட்டது