உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை றார்களே! இதற்குத்தானா, பகவான் மீது பாரத்தைப் போடுகிறீர்கள் ! பகவான் ! பாரத்தைத் தாங்கிட பகவான் இருக்கி றாராம். பொறுத்துக் கொள்ள வேண்டுமாம்! அறிவு, ஆற்றல், ஆராய்ச்சி, அனுபவம், படிப்பு. பட்டம், பாராளு மன்றம், ஆட்சி மன்றம், அதிலே அலங்கார ஆசனத்தில் அமர்ந்து ஆயிரக்கணக்கில் மக் கட் பணத்தை மாதா மாதம் சம்பளமாகப் பெற்றிடும் மந்திரிகள், அவரது அலுவலகப் பொறுப்பாளர் என்ற நிலையிலே ஜனநாயகப்படி நடப்பதாகப் பேசிடும் நாக ரிக சர்க்காரின் முதல்வருக்கு இதுதான் சரியான கார ணப் பட்டதா? 'கண்ணன் காட்டிய வழி' என்று கண்மூடிப் பஜனை செய்துகொண் டிருக்கலாமே, ஜனநாயகம் பேசி, மந்திரி பதவி வகிப்பதைவிட பஜனை மடம் போதுமே, இத்தகைய உபதேசம் செய்திட! படித்து பட்டம் பெற்று, மந்திரி பதவி யேற்று, மக்கள் குறை தீர, பகவான் மீது பாரம், பாவம் என்று பேசிடுவது நல்லதா? யோசித்துப் பார்க்க வேண்டும் கேள்விகள், கேள்விக் குறிகள் நம்மை நாமே கேட்டுக் கொள்வதோடு மட்டுமல்ல, நாட்டினரின் நல் லறிவைத் தொட்டிடும் கேள்விகள் கேட்டு அதற்கான விடைகள் பெற்றாக வேண்டும்! 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/63&oldid=1706112" இலிருந்து மீள்விக்கப்பட்டது