உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருணா நிதி புண்ணியந் தேடுவது போன்ற சாதாரண, ஆனால் மிக மிகச் சத்தற்ற சுவையேதுமற்ற வாழ்வு, மனித வாழ்வு தான். ஆனால் செக்கு மாட்டு வாழ்வு வாழ்கின்றதைக் காணவில்லையா நாம்? விஞ்ஞானமும், விஞ்ஞான வளர்ச்சியும் விரிந்து. வளர்ந்து மனித வாழ்வுக்கான எல்லாவித ஏற்றத்தை யும், எழில் நிறைந்த எண்ணற்ற பொருள்களையும் உண் டாக்கிடும் இந்தக் காலத்திலே, இந்த நாட்டில் இத்த கைய செக்குமாட்டு மனம் படைத்த மனிதர்கள் இருந் திடுவானேன் ? இவ்வுலகில் வாழ்கின்றனர் வாழவேண்டும் என்ப தற்காக உழைத்து, உண்டு, உறங்கி, பெண்டு பிள்ளை களைப் பெற்றுக் குடும்பத்தையும் வேறு நடத்துகின்ற னர், மனித உருவில்! மனிதனுக்கென்று, உள்ளஅறிவை, பகுத்தறிவை, கேள்விகள் கேட்டுக் கேட்டு, அதற்கான விடைகளைக் கண்டு, பிறரிடம் கேட்டு ஆராய்ந்து, முன்னேறிடும் மனமற்ற மனிதர்களாகவே, பலர், மிகப் பலர். இருப் பது ஏன்? ஏன்? ஏன்? ஏன் ? எதனால் இத்தகைய, மனம், மனித மனம், செயலற்ற, சிந்தனைத் தெளிவற்ற சுழ லும், உழலும் செக்குமாட்டு மனித மனம் மக்க களிடையே சர்வ சாதாரணமாகப் பதிந்து, பழகி, ஊறிப் போயிருக்கிறது? நாகரிக வாழ்விலே அவர்கட்குச் சுவை யில்லையா? 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/74&oldid=1706123" இலிருந்து மீள்விக்கப்பட்டது