இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குட்டிக்கதைகள்! குரங்காட்டம்! குட்டிக் கதைகள், ஒன்றல்ல இரண்டல்ல, மூன்று குட்டிக் கதைகள் சொல்லப் போகிறேன், தோழர்களே! சொல்லப் போகிறேன். ஆம். குட்டிக் கதைகள் கூறிக் கூறிக் கதை பேசிக் காலங் கடத்திடும் ஆச்சாரியாரின் ஆட்சி பற்றிய அலங் கோல நிலையை விளக்கிடத்தான் குட்டிக் கதைகள் கூறப்போகிறேன் நான். குட்டிக் கதைகள் பேசிடும் குல்லூகப்பட்டரைப் பற்றிய விளக்கங்கள் தந்திட குட்டிக் கதைகளையே துணைக்கழைக்கின்றேன். கேளுங்கள். தோழர்களே, கேளுங்கள்! கருத்தூன்றிக் கேளுங்கள். குட்டிக் கதை களை. பலே சூதாடி! ஆம் அவன் ஒரு பலே சூதாடிதான். சூதாடுவதுதான் அவனது வேலை, வாழ்வு, வாழ்க்கை யின் இலட்சியம் என்ற நிலையிலே உள்ளவன். காலையிலே சூதாட ஆரம்பிப்பான். காலைக் கடன் களைப் பற்றிய கவலையே தோன்றாது அவனுக்கு. சூதாடு வான் சூதாடுவான், சூதாடிக்கொண்டே பொழுதைக் கழிப்பான். 7