உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை காமக் குரங்காட்டமாடியது கடவுளின் கண்ணியத் திற்குப் புறம்பானதுதானே! இந்த ஆணுக்கும் ஆணுக்கும், அதாவது சிவனுக் கும், மோகினி வடிவெடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த வரும் ஒரு கடவுளாகிவிடுகிறார்! புராணம் பறை சாற்று கிறதே! இதுமட்டுமா? பெண்ணுக்கு ஏன் மீசையில்லை, தாடியில்லை? எப்போதிருந்து இல்லை? இதற்கும் ஒரு புராணம் இருக்கிறது. இதைத்தான் குறிப்பிட்டேன், வெட்கித் தலை குனிய வேண்டிய அளவுக்கு ஆபாசம் ஆண்டவர்மீது! ஏன்? தேவாதி தேவர்கள்மீதும், முற்றும் துறந்த முனி வர்கள்மீதும் பொழியப்பட் டிருக்கிறது என்றேன். மாண்டவ்யர் ஒரு முனிவர். முனிவர் என்றால் துறந்தவர்தானே! அவரும் மணம் செய்துகொண்டு இல்வாழ்க்கை நடத்த விரும்பினாராம். மனதிற்குகந்த மங்கையை உல கெங்கும் தேடியும் கிட்டாது, வீட்டிலிருந்த தன் வித வைத் தங்கையே தகுதி வாய்ந்தவள் என்று மனைவி யாக்கிக் கொண்டார். தங்கையை, விதவையான தங்கையையே தாரமாக் கிக் கொண்ட முனிவருக்குப் பெண் குழந்தை யொன் றும் பிறந்து வளர்த்து பருவ மங்கையு மானாள்! 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/93&oldid=1706142" இலிருந்து மீள்விக்கப்பட்டது