கருணாநிதி லேயே பத்திரமாகப் பாதுகாத்து வந்தானாம், எவருக் கும் தெரியாமல், எவருடைய கண்ணிலுமே படாமல்! நாட்கள் செல்லச் செல்ல, எம தருமனுக்குச் சப லம் மேலோங்கி வந்தது. ஒரு நாள் இரவு வயிற்றி லிருந்து, பருவ மங்கையை வெளியே எடுத்து, சரச மாடினான்! சரியென்று, முனிவரது மகளும் கூடிக்குலவி மகிழ்ந்தனராம். பகலிலே வயிற்றிலும், இரவிலே எம தருமனுடன் படுக்கையிலே கூடிக்குலவி காமக் களியாட்ட மாடுவது மாக, முனிவரது மகள், காலம் கடத்தி வந்தாள். . ஒருநாள், எமதருமன் சோலையிலே, முனிவரது மகளை, வெளியே எடுத்து, மண்டபத்திலே விட்டுவிட்டு நீராடச் சென்றான். மண்டபத்திலே, மங்கை தனித்திருந்தாள். பரு வத்தின் பூரிப்பும், புதுப்பெண்ணின் புது விளையாட் டால் பூரித்த அங்க அழகும் அவ்வழியே சென்ற அக்கினி பகவானின் கண்களையும் கருத்தையும் கவர்ந்து காமவெறி யூட்டி விட்டதாம். அக்கினி பகவான், தன்னுடன் வந்த தனது நண் பன் வாயு பகவானின் உதவியை நாட, வாயு பகவான், அந்தச் சோலையிலே வசந்தத் தென்றலை வீசினாராம். தென்றல், கோலமலர்கள் மீது வீசி, மலரின் மணத்துடன் தென்றல் பருவ மங்கையின் மனதிலே மயக்கத்தையும் உடலிலே உற்சாகத்தையும், உணர் விலே போதையு மேற்றியதாம். 95
பக்கம்:புராணப்போதை.pdf/96
Appearance