பக்கம்:புராண மதங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



68 புராண - மதங்கள் படையெடுப்புகள், ஆகியவைகள் நேரிட்டன - இந்த நிலையிலே, பல தலைமுறைகளுக்கு முன்னம் கோயில் களிலே காணிக்கை செலுத்தப்பட்ட விலையுர்ந்த நகைகளிலே எவ்வளவு காணாமற் போய்விட்டனவோ, எவ்வளவு நவரத்னங்கள் இடம் மாறி விட்டனவோ, யார் கண்டார்கள்!! இவ்வளவு பெரும் செல்வம், குறிப் பும் குறிக்கோளுமற்று, கோயில்களிலே, இருந்து வரு கிறது. பொது மக்களின் கவனத்திற்கு, இந்த நிலையை முதன் முதல் கொண்டு வந்தவர்கள் - கொண்டு வந்த தன் மூலம் பொது மக்களின் கோபத்துக்கே கூட ஆளானவர்கள் - சுயமரியாதைக்காரர்கள் தான். நாட்டிலே உள்ள ஏழ்மையையும் திருக்கோயில் களிலே உள்ள செல்வத்தையும், ஒரு சேர எடுத்துக் கூறி, ஏழையை ஈடேற்ற வழி தெரியக் காணோமே என்று சர்க்கார் ஏக்கம் கொண்டதாகக் காணப்படுவது, வெண்ணெயிருக்க நெய்யில்லையே என்று அழும் போக் காகத் தெரிகிறது, என்று எடுத்துரைத்தவர்கள் - பல மான எதிர்ப்புக்கிடையே எடுத்துச் சொல்லி வந்தவர் கள் - சுயமரியாதைக்காரர்கள் தான். இதை நாடு அறி யும் - நாடாளும் சர்க்காரும் அறியும். இந்தப் "புண்ணிய பூமியில்" மட்டுமல்ல, பூலோகத் தில் எந்த நாட்டிலேயும், செல்வம் சேர்ந்ததும், பக்தி மான்கள் துவகக்த்திலே இப்படித்தான், பூஜாலயங்க ளிலே, பெரும் பொருளைக் குவித்திருக்கின்றனர். மண்டிக் கடையில் கணக்கெழுதும் மகாலிங்கம், நாலு காசு சம்பாதித்து, தனிக்கடை வைத்து, ஒரு குறிப்பிடத்தக்க புள்ளியான உடனே அதற்கு முன்பு கழுத்திலே இருந்த சாதாரண உத்திராட்சத்துக்குப் பதில், தங்கக் கவசமிட்ட உத்திராட்சம் அணியவும், மரத்தாலான விபூதி மட்லுக்குப் பதில் வெள்ளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/69&oldid=1033308" இலிருந்து மீள்விக்கப்பட்டது