பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

145


விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய்! நின்னாட்டு இளம்பிடி ஒருகுல் பத்து ஈனும்மோ? நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு இன்முகம் கரவாது உவந்த நீ அளித்த அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் 5 குடகடல் ஒட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே! பூணாரம் பூண்டவனே! ஆயே! நின் நாட்டுப் பெண் யானை ஒரு கருப்பத்திற் பத்துக் கன்றுகள் வீதம் ஈனுமோ? நீ இரவலர்க்குக் கொடுத்த யானைத் தொகையை எண்ணினால், கொங்கரை மேற்கடற்கண்ணே நீ போரிட்டுத் துரத்திய காலத்து, நினக்கு தோற்றோடிய கொங்கர் படையினர், தம் கையினின்றும் எறிந்து சென்ற வேலினும் அவை பலவாகுமே!

சொற்பொருள்: 2. ஒரு சூல் ஒரு கருப்பம் 4. இன்முகம்

கரவாது - இனிய முகத்தை ஒளியாது வெளிப்படுத்தி. 7 தலைப்

பெயர்த்திட்ட - அவர் தாம் புறம்கொடுத்தலால் தம்மிடத்தி னின்றும் பெயர்த்துப் போடப்பட்ட - 131. காடும் பாடினதோ?

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன்: ஆய் அரண்டின். திணை: பாடாண். துறை: இயன்மொழி.

(யானைக்குப்பிறப்பிடமாகின்ற காட்டினும், அண்டிரனைப் பாடினோர் யானை மிகவும் உடையரென்று, அவனது கொடைச் சிறப்பைக் கூறினார்)

மழைக்கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன், வழைப்பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன் குன்றம் பாடின கொல்லோ, களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?

முகிலினம் சென்று தங்கும் உயர்மலைக்குத் தலைவன்; புன்னை மலர்க் கண்ணியும், தப்பாத வாளும் உடையவன்; அத்தகைய ஆயின் மலையை எம்மையுமன்றிக் களிறு செறிந்த கவின்காடும் பாடினவோ? (தன்னைப் பாடுவார்க்கு யானை களையே பரிசிலாக வழங்கும் வழக்கம் உடையவன் ஆய் என்பது அறிந்த புலவர், யானைகள் மலிந்த ஒரு காட்டைக் கண்ணுற்றதும், 'இக் காடு அவனைப் பாடியதனால் பெற்ற பரிசில் போலும் இவ் யானைகள்’ என வியந்து, ஆயின் கொடை வளத்தைப் பாராட்டுவது இது)