பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

புறநானூறு - மூலமும் உரையும்


தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து, தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி, - மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு 5 உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து, நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக், கரையவர் மருளத், திரையகம் பிதிர, நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து, குளித்துமணற் கொண்ட கல்லா இளமை 10

அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ - "தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி, நடுக்குற்று, இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம்" ஆகிய எமக்கே?

இப்பொழுது நினைத்தாலும் எம் நிலையை நினைக்க நினைக்க எமக்கே இரக்கமாயிருக்கின்றதே! மணலிலே வண்டல் இழைத்து, அங்கு வைத்து விளையாடும் வண்டல் பாவைக்குப் பூச்சூட்டிக், குளிர்ந்த பொய்கையிலே விளையாடும் மகளிரோடு கைகோர்த்து ஆடினோமே! அவர் தழுவத் தழுவி, அசைத்த விடத்து அசைத்து விளையாடினோமே! வஞ்சனை அறியாத எம்மொத்த இளைஞருடன், நீர்த்துறை அருகே தாழ்ந்த கிளையையுடைய மருத மரத்தில் ஏறி, மடு நீருட் பாய்ந்து மூழ்கி, அடியின் மணலை முகந்து காட்டினோமே! அவ் விளமைச் செயலை நினைந்தால் அதன் அறியாத நிலை பெறக்கூடுவதோ? எவ்விடத்து, அதனினும் சிறந்த பருவம் உண்டு? பூணிட்ட தண்டினை ஊன்றி, இருமல் இடையிடையே தொல்லைதரச், சிலசில வார்த்தைகளே பேசி வாடும் எமக்கும், அவ் விளமைநிலை இனிக் கிடைக்குமோ?

244. கலைபடு துயரம் போலும்!

(பாடினோர், பாடப்பட்டோர் யாவரெனத் தெரியாத வாறு) இது அழிந்தது. பாடலும் உரையும் சிதைந்தே கிடைத் துள்ளது. தான் உறுகின்ற துன்பத்தைத் கலைமேல் வைத்துக் கூறியது இது. முசுக்கலையின் நீக்குதற்கு, இரலி' என விசேடித்தனர். சாதல் என்பது இன்னாதாதலிற் பெரும் பிறிதாயின்றோ என்றான்' என்பன கிடைத்த உரைக்குறிப்புக்கள்.)

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா, இரவல் மாக்களும்..........