பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

புறநானூறு - மூலமும் உரையும்



வையங் காவலர் வளம்கெழு திருநகர், மையல் யானை அயா வுயிர்த் தன்ன நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை புதுக்கண்மாக்கள் செதுக்கண் ஆரப் - பயந்தனை, மன்னால், மன்னே! இனியே 1O பல்ஆ தழீஇய கல்லா வல்வில் உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி, நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை விரகுஅறியாளர் மரபிற் சூட்ட நிரைஇவண் தந்து, நடுகல் ஆகிய 15 வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக், - - கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகலம் மகடூஉப் போலப் புல்என் றனையால் பல்அணி இழந்தே

எம் இறைவனின் பெரிய இல்லமே! நின் முற்றம் நீரற்ற ஆற்றிலே கிடக்கும் ஒடம்போலப் பொலிவழிந்து கிடக்கக் காண்கின்றேனே! மதுவுஞ் சோறும் வழங்கிவந்த சிறப்பெல்லாம் மறைந்தனவே! என் கண்மணிகள் சோர்ந்து வீழ்வதாக. நெய்சொரிந்த ஆட்டிறைச்சியைப் பொறித்து, இரவலர் காணும் முன்பு சமைத்து வழங்கினான்; அதுவும் கழிந்தது. இன்றோ, பகைவர் கவர்ந்த ஆநிரைகளை மீட்டுத்தந்த அப்போரிலே அவன் வீழ்ந்தான்; நடு கல்லும் ஆயினான்! இல்லமே! கைம்மைக்கோலம் மேற்கொண்டு பொலிவழிந்து தோன்றும் அவன் மனைவியைப் போல. நீயும் நின் பொலிவு அனைத்தும் அழிந்தனையோ!

262. தன்னினும் பெருஞ் சாயலரே!

பாடியவர்: மதுரைப் பேராலவாயர் திணை: வெட்சி துறை: உண்டாட்டு (தலைத் தோற்றமுமாம்).

("போராற்றி வரும் வெட்சித் தலைவனுக்கும், அவன் மறவருக்கும் உண்டாட்டுச் செய்யுங்கள் என வரும் செய்யுள் இது. 'நுவல் வழித் தேற்றம் என்னும் துறைக்கு இளம்பூரணரும் (தொல், புறத்.சூ.3), 'உண்டாட்டு’ என்பதற்கு நச்சினார்க்கினியரும் மேற்கோள் காட்டுவர்) -

நறவும் தொடுமின் விடையும் வீழ்மின், பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப் புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின், ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று; நிறையொடு வரூஉம் என்னைக்கு

உழையோர் தன்னினும் பெருஞ் சாயலரே. 5