பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

usługiảcadas 323 335. கடவுள் இலவே!

பாடியவர்: மாங்குடி கிழார். திணை: வாகை. துறை: மூதின் முல்லை.

(மலை நாட்டுத் தலைவன் ஒருவனது சிறப்பைக் கூறுகின்றது செய்யுள். களிறு எறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவினல்லது, நெல் உகுத்துப்பரவும் கடவுளும் இலவே என்றது, வீரவழிபாட்டில் அக் குடியினர்க்கிருந்த பற்றின் மிகுதியைக் காட்டுவதாகும்)

அடலருந்துப்பின்.

●●始姆微始够●●娜始够够影够姆影 குருந்தே முல்லையென்று இந்நான் கல்லது பூவும் இல்லை; கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே, சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையொடு 5

இந்நான் கல்லது உணாவும் இல்லை; துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று இந்நான் கல்லது குடியும் இல்லை; ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி, - ஒளிறுஎந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக் 10 கல்லே பரவின் அல்லது, நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே குரவு தளவு குருந்தம் முல்லை என்ற நான்கு வகையன்றி வேறு சிறந்த பூக்கள் கிடையா. வரகு, தினை, கொள், அவரை என்பனவன்றி வேறு சிறந்த உணவுப் பொருள்கள் கிடையா. துடியன், பாணன், பறையன், கடம்பன் இவரையன்றிச் சிறந்த குடிகள் கிடையா. பகைவர் படைகளின் முன்னின்று மேலெதிர் வராதவாறு தடுத்து, அவர் கொல்களிற்றை வென்று, தாமும் வீழ்ந்து நடுகல்லாயினவரின் நடு கல்லைத் தொழுவதன்றி, நெல்லும் பூவும் சொரிந்து வழிபடச் சிறந்த கடவுளும் வேறு கிடையா, (இவை எல்லாம், புலவர் குறித்துப் பாடும் காட்டுத் தலைவன் நாடு பற்றியவையாகும்.) • சொற்பொருள்: 1. அடல் அருந்துப்பின் - வெல்வதற்கரிய வலிமையுடைய.5.பொறி கிளர்-வரிகள் விளங்குகின்ற.9.ஒன்னாத் தெவ்வர் - மனம் ஒன்னாத பகைவர். முன்னே விளங்கி - அஞ்சாது நின்று அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்து.

336. பண்பில் தாயே!

பாடியவர்: பரணர் திணை: காஞ்சி. துறை: மகட்பாற் காஞ்சி.

(வேந்தனுக்கு மகண்மறுத்தலால் அடுத்துப் பெரும்போர் நிகழும் என்றிருந்த நிலையைக் கண்டாரான பரணர், அப்