பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

363


காட்டிலே மேய்ந்துவிட்டு வீட்டுக் கொல்லைப் புறத்திலே வந்து தங்கும் மானின் நெற்றிமயிர் போன்று, எம் சென்னியிலே பொற்றாமரை சூடி விளங்கின மயிர்களும் அடங்கிப் படியுமாறு தண்பனி பெய்யும் புலர்காலை வேளையிலே, மன்றத்துப் பலவின் பெரிய அடியிலே பொருந்தியிருந்து, கிணைப்பறையின் ஒலியுடனே சேர்ந்து, குறிஞ்சி மரஞ்செறிந்த மலைப்பக்கத்தைப் புகழ்ந்து பாடினேன். அதைக் கேட்டுப் புலிப்பல் தாலியணிந்த சிறுவரைப் பெற்ற மான்கண் மகளிர்க்குக் கணவர்கள் வந்தனர். வந்தவர், புலித்தோலின் மேலே முள்ளம்பன்றித் தசையும், சந்தனமும், யானைத் தந்தமும் குவித்து உபசரித்து அளித்தனர். அத்தகைய அருள் விளங்கும் நாட்டிற்கு மன்னன், எம் கோமானான ஆய் அண்டிரன். ஞாயிறே விசும்பிலே நீயும் விளங்குகின்றனையே! இவ் ஆய் அண்டிரனைப்போல நீயும் வள்ளன்மை உடையையோ? இல்லை காண்!

375. பாடன்மார் எமரே!

பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பாடப்பட்டோன். ஆய் அண்டிரன். திணை: பாடாண். துறை: வாழ்த்தியல்.

(ஆயின் கொடைவென்றியைப் போற்றிக் கூறி, ‘புலவர் புக்கிலாகி நிலவரை நிலீஇயர் என் வாழ்த்துகின்றார் புலவர். ‘பீடின்று பெருகிய திருவிற் பாடின் மன்னர்’ எனக் கொடைக் குணம் அற்றோரைக் கூறுவதும் கருதுக) -

அலங்குகதிர் சுமந்த கலங்கற் குழி நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற் பொதியில் ஒருசிறை பள்ளியாக - முழாவரைப்போந்தை அரவாய் மாமடல் நாரும் போழும் கினையொடு சுருக்கி, 5

ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ, 'ஊழ்இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப் புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப் பிரசம் தூங்கும் அறாஅ யாணர், வரையணி படப்பை, நன்னாட்டுப் பொருந: 10

பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்! யாவரும் இன்மையின் கிணைப்பத், தாவது,

பெருமழை கடல்பரந் தாஅங்கு, யானும் ஒருநின் உள்ளி வந்தனென்; அதனால் புலவர் புக்கில் ஆகி, நிலவரை 15