பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

387


கொழுத்த இறைச்சியைத் துண்டித்துக் கோடைப்பஞ்சு நிறைந்த மூடைபோன்று எம் வயிறு நிறையுமாறு ஊன் தருவாயாக. பாம்பு நாக்குப் போலப் பழைமையாகிக் கிழிந்துபோன எம் கந்தல் உடையை நீக்கிப், பகன்றைப் பூப்போன்ற மெல்லாடையைத் தந்து, நிறைந்த செல்வமும் அருள்வாயாக பெருமானே! ஆடு மகளின் ஒட்டிய இடையைப் போல, நாடெல்லாம் வளங்குறைந்து கோடையாயின காலத்தும், காவிரி நீர் சுரந்து காக்கும் வளநாடான சோழநாட்டின் தலைவனே! தப்பாத வாட்படையை உடைய கிள்ளிவளவன் வாழ்வானாக!” என்று, எந்நாளும் நின் பெருமை பொருந்திய திருவடிகளையே யாம் போற்றிப் பாடுவோம்! -

394. என்றும் செல்லேன் பாடியவர்: கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக்

குமரனார். பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன். திணை:பாடாண். துறை: கடைநிலை.

இரந்து நின்றவருக்கு வெஞ்சின வேழம் நல்கினன். அதனைக் கொண்டு என் செய்வது என அஞ்சி நிற்க, அது சிறிதெனக் கருதினரோ எனக் கருதித் தன் செயலுக்கு நாணியவனாகப் பிறிதுமோர் பெருங் களிறு நல்கியவன் இவன். இனி அவனிடம் என்றும் செல்லேன்' என, இவனது கொடை மேம்பாட்டை வியந்து பாடுகின்றார் புலவர். இதனைப் பொருநராற்றுப் படைக்கு இளம்பூரணர் காட்டுவர் (தொல், புறத். சூ.30)

சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின், ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் வள்ளிய னாதல் வையகம் புகழினும் உள்ளல் ஓம்புமின், உயர்மொழிப் புலவீர்! 5

யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய்வைகறை, ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப், பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை வாடா வல்சி பாடினேன். ஆக, அகமலி உவகையொடு அணுகல் வேண்டிக் 10

கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழம் நல்கினன், அஞ்சி யான்அது பெயர்த்தனென் ஆகத், தான் அது சிறிதென உணர்ந்தமை நாணிப், பிறிதும்ஒர் பெருங்களிறு நல்கியோனே, அதற்கொண்டு, 15