பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

புறநானூறு - மூலமும் உரையும்


43O Hpongyip - opewspin e-conulio நல்லிறையனார் 393

இவராற் பாடப் பெற்றோன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆவான். இறையனார் என்னும் பெயரோடு, இவரது சீர்மை கருதி, நல்’ என்னும் அடை மொழியைத் தந்தனர் ஆகலாம். இவர் வறியராகப் பலர்பாற் சென்று சென்று நலிந்தவர் என்பது செய்யுளாற் புலனாகிறது. காவிரியால் வளம் மலிகின்ற சோணாட்டைக், "காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருன' என்னுஞ் சொற்களால் நமக்கு வலியுறுத்துகின்றார் இவர். 'போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன அகன்றுமடி கலிங்கம்’ என்று, அக் காலத்தே நெசவுத் தொழிலில் தமிழ்நாடு பெற்றிருந்த சிறப்பையும் எடுத்துக் கூறுகின்றார்; சோழனது அருளார்ந்த கொடையுள்ளத்தையும் தெளிவாக உணர்த்துகின்றார்.

நன்னாகர் 176, 376, 379, 381, 384

இவர் புறத்திணைச் செய்யுட்களைச் செய்வதில் வல்லவர். புறத்திணை நன்னாகனார் எனவும் இவர் பெயரைக் குறிப்பிடுவர். ஒய்மான் நல்லியக் கோடனையும், ஒய்மான் வில்லியாதனையும், கரும்பனூர் கிழானையும் இவர் பாடியுள்ளனர்.'அவனைக் காணும் போதெல்லாம், காணாது கழிந்த என் பழைய வறுமை நாட்களை எண்ணி இரங்குவேன்' என, இவர் நல்லியக் கோடனின் சிறப்பை அழகுற எடுத்துக் கூறுகின்றனர். விதியைப் பால்’ என்பர் இவர். 'எந்தை உதவியதனால், அந்நாளினின்று இன்றுவரையும் இரப்பைப் பற்றியே சிந்தியேன்” என, வில்லியாதனின் கொடைச் சிறப்பை இவர் போற்றுகின்றனர். 'மாவிலங்கை என்னும் நகரம் தமிழகத்து எப் பகுதியின்கண் இருந்ததென அறியுமாறில்லை. கோதாவிரிக் கரையில் ஒர் நகர் பண்டிருந்தது என்பர்; ஆனால் ஓய்மான் என்பதனால், திண்டிவனப் பகுதியாகிய ஒய்மானாட்டு எல்லையுள் எங்காயினும் இவ்வூர் இருந்திருக்கும் எனலாம். குறுந்தொகைச் செய்யுட்களைச் செய்துள்ள நன்னாகையார் என்பவர் இவர் உறவினர் போலும்.

நெட்டிமையார் 9, 12, 15

இவருக்கு இப் பெயர் உறுப்பால் வந்தது என்பர். இவரைப் பெண்பாலர் எனவும் கூறுவர். இவராற் பாடப் பெற்றோன், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி யாவான். அவனை வாழ்த்தும் இவர், நன்னீர்ப்பஃறுளி மணலினும் பலவே. வாழிய' என்கிறார். இதனால், குமரிக்கண்டத்தின் கடல்கோளுக்கு முற்பட்ட காலத்தினர் இவர் எனலாம். இவன் போரியற்றுதலிலும் அறநெறி பிறழாதவன் என்பதைச் செய்யுள்காட்டும் (புறம்.9). ‘இன்னாவாகப் பிறர்மண் கொண்டு, இனிய செய்தி நின் ஆர்வலர்