பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனனுரை பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே, பைந்தமிழ் நலத்தைப்

பாரிக்க்க் கருதிய பாண்டியப் பேரரசர்கள், தமிழ் நலத்தாற் செறிவுற்றிருந்த சான்றோர்களுட் சிலரை ஒருங்கே கூட்டித் தமிழ்ச்சங்கங்களை நிறுவித், தாய்மொழியாம் தன்னேரிலாத் தமிழ்மொழியைப் பேணிப் புரந்தனர். ஆய்வுக் களங்களையும், அறிவியல் மன்றங்களையும் அமைத்துச் சிறந்தனர். இவ்வாறு சங்கங்களை நிறுவித் தாய்மொழியைப் பேணிய பெருமை பழந்தமிழர்கட்கு மட்டுமே உரியதாகும். தபரும்களையும் தும்பும் தூசும் போக்கிப் பயனுள்ள நன்மணிகளை மட்டுமே தெளித்தெடுத்து, அவை என்றென்றும் நிலைத்து நிற்குமாறு தொகுத்துக் காத்த அந்தச் செயற்கரிய, செயற்குரிய தமிழ்த்தொண்டினை, தமிழ்ப்பற்றினை, தமிழ் அறிவினை எண்ணும்போது, நாம் பெரிதும் வியக்கின்றோம்; பூரிப்பும் பெருமிதமும் அடைகின்றோம்.

பழந் தமிழ்ச்சான்றோர் தொகுத்துப் பேணிய தமிழ்ச்செல்வங்களுள், புறநானூற்றுத் தொகைநூல் ஒப்பற்ற ஒளிர்மணிக் கோவை யாகும். - அருளும் ஆண்மையும், பண்பும் பாசமும், பாவும் பாவலரும், இசையும் இசைப்போரும், அரசும் நாடும், மக்களும் மன்னரும், அன்பும், பண்பும் உயிர்ப்புடன் விளங்குகின்ற நிலைகளைப் புறநானூற்றுள் கண்டு களிக்கலாம். புத்துணர்வும், புதுவாழ்வும் பெறத் துடிதுடிக்கும் தமிழ் மக்களுக்குப் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம். தென்னகத்தின் பண்டைய வீரவரலாற்றைக் காட்டி, நம்மையும் வீரஞ்செறிந்த தமிழராக்கும் தூண்டுகோல் புறநானூறு எனில், அது சாலவே பொருந்தும்.

தமிழறிந்தார் அனைவருமே புறநானூற்றைக் கற்க வேண்டும். புறநானூற்றுத் தமிழரைப் போன்றே அஞ்சா நெஞ்சமும், ஆராத் தமிழ்ப் பற்றும், மானவுணர்வும் பெற்றவர்களாகத் திகழ்தல் வேண்டும். இதற்குச் சிறிதளவேனும் உதவ வேண்டும் என்கின்ற பேராசையே, தமிழார்வமே, இப்பதிப்பின் தோற்றத்திற்குரிய மூலகாரணம் ஆகும்.

இந்த ஆசையை வளர்த்து, அது செயலாகப் பொலிவு பெற உதவியவர், தமிழ் நாட்டின் ஒப்பற்ற தமிழ் எழுத்தாளரும், தேசபக்தரும், பலப்பல எழுத்தாளரை உருவாக்கிய ஞானமேதையுமாகிய ஆசிரியர் திரு. டி.எஸ். சொக்கலிங்கம் அவர்கள். மூலத்தைச் செப்பனிட்டும், குறிப்புக்கள் சிலவற்றை எழுதித்தந்தும் உதவியர் திரு. வித்துவான் போளுர் அ. குப்புசாமிப் பிள்ளை அவர்கள். இவ்விருவரும் இந்நாளில் நம்முடன் இல்லாதிருப்பினும், தமிழ்நலம் கருதிய இவர்களின் தமிழ் உயிர்ப்பு நம்மோடு கலந்து நம்மைத் தமிழ்நெறிக்கண் செலுத்தி உயர்த்தும் எனலாம்.

இதன் முதற்பதிப்பு 1958ஆம் ஆண்டு பொங்கற் புதுநாளில் வெளிவந்தது. முதல் மூன்று பதிப்புக்களையும் அருணா