பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புவியர்க்கேசிகன்-பொதுவியற்படலம்ட 221 ೧FTEುಖTT தலைவி என்பதும், அது செயன்முடித்து மீளும் தலைவனது தேர் வரவைக் கண்டபோது என்பதும் கொள்க.தேர் வரவினை மிகுத்துக் கூறுதலால் தேர்முல்லை ஆயிற்று. தீர்ந்து வணங்கித் திறையளப்பத் தெம்முனையுள் ஊர்ந்துநங் கேள்வர் உழைவந்தார்-சார்ந்து பரிகோட்டமின்றிப் பதவார்ந்துகளும் திரிகோட்டமாவிரியத் தேர். 277 - போர் முனையிலே பகைவர்கள் தம்முடைய சினம் தீர்ந்தவராக வணங்கித் திறையினை அளந்து கொடுக்கவும், நம்முடைய காதலர், ஒன்றோடொன்று சார்ந்து செலவு வளைவின்றிச், செங்கோல் அறுகம் புல்லைத் தின்று துள்ளா நிற்கும் வளைந்த கொம்பினை யுடையவான மானினம் கெட்டோடும் படியாகத் தேரினைக் கடிதாகச் செலுத்தி, நம்பக்கத்தே வந்தனர். - - 'திர்ந்து வணங்கித் திறையளப்ப என்றதனால், பகைவரை வென்று,அவரது உருத்தெழுந்தநிலையைத்திருத்தியது.ஆயிற்று. - 39. நாண் முல்லை . செறுநர் நாணச் சேயிழையரிவை வறுமனை வைகித்தற்காத்தன்று. ... . சிவந்த அணிகலன்களைக் கொண்டிருந்தாளான ஒருத்தி, தன் பகைவரும் நாணங் கொள்ளும்படியாகத், தன் கணவன் இல்லாததால் வறிதான மனையிடத்தே தங்கியிருந்து, தன்னைக் காத்துக்கொண்டது, நாண் முல்லை ஆகும். - நாணே வேலியாகத் தன்னைக் காத்தனள் 676ύτ, அதன் மிகுதியைக் கூறுலால், நாண் முல்லை ஆயிற்று. கொய்தாரமார்பிற்கொழுநன் தணந்தபின் பெய்வளையாட்குப்பிறிதில்லை-வெய்ய வளிமறையும் இன்றிவழக்கொழியா வாயில் நளிமனைக்கு நற்றுணை நாண. 278 மட்டஞ் செய்த மாலையினை யுடைய மார்பினனான - கணவன் பிரிந்துசென்றபின்பு,பெய்தவளைகளை உடைய அவன் தலைவிக்கு வேறொரு காவலும் இல்லை; வெய்ய காற்றினை மறைக்கும் கதவுதானும் இல்லாதே, யாவரும் இயங்குதலும் ஒழியாதே இருக்கும் வாயிலையுடைய பெரிய மனைக்கு, அவளுடைய நாணே நல்லதொரு துணையாக அமைந்தது. வளிமறை-கதவைக் குறித்தது.