பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் கைக்கிளைப் படலம் 231 அழகிய தழையாடை அணிந்த அல்குலினை உடையாளது, நல்ல நலத்தினைக் கூடாத வெய்ய வருத்தமானது மிகுதியாக வெளிப்படுதலினாலே, தலைவன் அவளை இரந்தது, வெளிப்பட இரத்தல் ஆகும். உரவொலி முந்நீர் உலாய்நிமிர்ந் தன்ன கரவரு காமம் கனற்ற-இரவெதிர முள்ளெயிறிலங்கு முகிழ்நகை - வெள்வளை நல்காள் விடுமென் உயிரே. - 293 வலிய ஆரவாரத்தையுடைய கடலானது, கரை கடந்து ஏறிப் பரந்தாலொத்த ஒளித்தற்கரிய காமமானது என்னை அழற்ற, யான் இவளை இரத்தலை மேற்கொள்ளவும், முட்போன்ற பற்கள் விளங்கும் மூரல் முறுவலையும் வெள்ளிய வளையல்களையும் உடையாள், எனக்கு அருளாள் ஆயினள்; அதனால், இனி என் உயிர் என் உடலுடன் கொண்ட தொடர்பையும் விட்டுவிடும். நல்காளாகவே உயிர் விடுவேன்’ எனக் கூறியது இது. தொகுத்து உரைத்தல் கைக்கிளைப் படலத்தின் ஆண்பாற் கூற்று நிகழுவதன் முறைமையினை இதுவரை கண்டோம். தலைவன் ஒருவன் பொழிலிடத்தே தலைவியைக் காண்டலாகிய காட்சியும், கண்ட அவளைத் தேவமகளோ மானுட மகளோ என ஐயுறும் ஐயமும்; அவள் மானுடமகளே எனத் துணிதலான துணிவும்: தன்னைத் தலைவி அறிந்திலளே எனத் தலைவன் உள்ளத்தே கருதியதாகிய உட்கோளும்; தலைவியைப் பெற்றோரை வாழ்த்துதலாகிய பயந்தோர்ப்பழிச்சலும், தலைவியது.அழகினை வியந்து பாராட்டுதலாகிய நலம் பாராட்டலும்; தலைவியை எய்துதல் அருமையாயினமையின், தலைவன் அவளைப் பெரிதும் புகழ்ந்து நின்றதான நயப்புற் றிரங்கலும், தலைவியைக் கூறப்பெறாத துன்பமிகுதியோடே தலைவன் தனிமையுற்று வருந்துதலான, புணரா இரக்கமும்; தலைவியைக் கூடாத வெய்யதுன்பமானது வெளிப்பட்டுப்பெருகத் தலைவன் இருந்து கூறுதலான, வெளிப்பட இரத்தலும் என்னும் ஒன்பது துறைகளாக இது நிகழும். - - N