பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கைக்கிளைப்படலம் ஆண்பாற் கூற்று அஞ்சொன் மாரிபெய் தவியாள் நெஞ்சம் பொத்தி நிறைசுடு நெருப்பே. 183 இ-ன் ஆரவாரம் மிசு மறைந்து என்நெஞ்சிலேயிருந்தும், சிவந்த வாயினையும் பெரிய தோளினையும் அழகியநுதலிளையும் உடையவள் அழகிய வாயிடத்து அழகிய வார்த்தையாகிய மழையைச் சொரிந்து ஆற்றாள்; என்மனத்திலே கலந்து என்னுடைய நிறையுடை மையைச் சுடா நின்றது காமத் தீ எ-று. காமத்தீயை அஞ்சொல்மாரி பெய்து அவியாள் என்க. உட்கோளாவது உறலாம் என்பதனைஉட்கொள்கை. 289. பயந்தோர்ப் பழிச்சல் (4) இவட்பயந் தெடுத்தோர் வாழியர் நெடிதென அவட்பயந்தோரை யானாது புகழ்ந்தன்று. இ-ள். இவளைப் பெற்றெடுத்தோர் பெரிதும் வாழ்வாராக வெனச் சொல்லி அவளைப் பெற்றோரை அமையாது புகழ்ந்தது எ-று. வ--று. கல்லருவி யாடிக் கருங்களிறு காரதிரும் மல்லலஞ் சாரன் மயிலன்ன-சில்வளைப் பலவொலி கூந்தலைப் பயந்தோர் நிலவரை மலிய நீடுவா ழியரே. இ-ள். மலையருவி ஆடி வலிய யாளை மேகம்போல முழங்கும் வனப்பத்தினை உடைய அழகிய மலைப்பக்கத்து மயிற்பேடையை ஒத்த சில தொடியினையும் பலபகுதியாய்த் தழைந்த மயிரினையும் உடையாளைப் பெற்றோர், பூமி எல்லையிலே மிக நெடுங்காலம் வாழ் வரராக எ-று. 290.நலம் பாராட்டல் அழிபட ரெவ்வங் கூர வாயிழை பழதீர் நன்னலம் பாராட் டின்று. (5)