பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


f{}{} புற்று 'திடீர் திடீர் என்று என் தாய் விட்டத்திலிருந்து தொங்கும் காட்சி என் கனவில் தோன்றித் தோன்றி மறைந்தது. என் சின்ன வயது விளையாட்டுகள், அடக்குவாரின்றித் திரிந்த அநுபவங்கள்...... பிறகு அந்தப் .ே விதி. . . 'ஆ' "இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. பாம்பு எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு, பிறகு தன் வாலைத் தானே கவ்விக்கொண்டு, தன்னையே விழுங்கப் பார்த்தது போல் நான் என்னையே விழுங்க ஆரம்பித்து விட்டேன் என்று கினைக்கிறேன்.' "சொல், சொல், உன்கேள்விகளுக்கு நீயே பதில் கண்டுபிடி-' 'ஒன்றுமே செய்யாம விருத்தலின் பிரதிக் கிரியையும், எல்லாம் செய்தாலும் அக்காரியத்தின் பிரதிக்கிரியையின் பிரதிக்கிரியையும் கடைசியில் அதில்தான் கொண்டுபோய் விட்டுவிடுகிறது, பரமபத படத்தின் பெரிய பாம்பு. ஆகவே கான் ஊர் திரும்பினேன்-' . "எதற்கு?' என்று அது கேட்டது. “புற்றைப் பார்க்க-' :பிறகு.?-தயங்காதே; நீ என்னிடம் மறைக்க முடியாது. உன்னை அறியாமல் உன்னுள்ளே தான் இருக்கிறேன். உன் காரியங்கள் அனைத்தையும் நான் கவனிக்கிறேன். உன் தூக்கத்தில் உன் கினைவு அற்று ே அசையும் ஒரு சிறு அசைவு முதல் என்னை ஊடுருவித்தான் செல்கிறது. ஆகையால் நீ இன்னும் எதற்காக வந்தாய் என்று சொல். கான் அடியெடுத்துக் கொடுக்கக் காத்திருக்க வேண்டாம்.' : .