பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Gajff. F » sffr o . 181 லும் உங்களை கினைத்துக் கொள்வேன். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? மெளனம் ஒன்றைத் தவிர வேறெதைத் தனியாய் அநுபவிக்க முடியும்? மெளனம் கூட ஒரு ஸ்டே'ஜிக்குப் பிறகு அநுபவிக்கிற விஷயமில்லை. வழியில்லாமல் ஸஹித்துக் கொள்ளும் சமாசாரம்தான். உங்களுக்கும் எனக்கும் மெளனமாயிருக்கிற வயசா? நெஞ்சக் கிளர்ச்சியை ஒருவருக் கொருவர் சொல்லச் சொல்ல, அலுக்காமல், இன்னமும் சொல்லிக்கொள்ளும் நாளல்லவா? நீங்கள் ஏன் இப்படி வாயில்லாப் பூச்சியா யிருக்கிறேள்? நீங்கள் புருஷாள்-உங்களுக்கு உண்மை யிலேயே விரத்தியிருக்கலாம். நான் உங்களைவிடச் சின்ன வள்தாளே! உங்கள் அறிவையும் பக்குவத்தையும் என் னிடம் எதிர்பார்க்கலாமா? உங்களுக்காக இல்லாவிட்டா லும் எனக்காகவாவது என்னுடன் நீங்கள் பேசணும். எனக்குப் பேச்சுவேனும், உங்கள் துணைவேணும்... ஐயையோ, இதென்ன உங்களைக் கையைப் பிடித்து இழுக் கிற மாதிரி நடந்துகொள்கிறேனே! என்னை மன்னிச்சுக் கோங்கோ, தப்பா கினைச்சுக்காதேங்கோ. ஆனால் எனக்கு உங்களையும் என்னையும் பற்றித் தவிர வேறு கினிைப்பில்லை, கானும் நீயும்’ எனும் இந்த ஆதாரத்தை ஒட்டின சாக்குத்தான் மற்றதெல்லாம் எனக்கு. இதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், எழுத வந்ததுகூட மறந்துவிடுகிறது. - ஆனால், நானும் நீங்களும்' என்று எல்லாம் எண்ண வும் எழுதவும் சுவையாயிருந்தாலும் குடும்பம் என்பதை எங்கே ஒதுக்கிவைக்க முடிகிறது, அல்லது மறந்துவிட முடிகிறது? குடும்பம் என்பது ஒரு rராப்தி. அதிலிருந்து தான் லகடிமி, ஐராவதம், உச்ரவஸ் எல்லாம் உண்டா கிறது. குடும்பத்திலிருந்து நீங்கள் முளைத்ததனால்தானே எனக்குக் கிட்டினர்கள்: ஆலகால விஷமும் அதிலிருந்து