பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


150 நம்பி ஆனால் நான் பார்த்ததை கேட்டும் சொல்ல எனக்கு நா எழவில்லையே! நாக்கு வாய்க் கூரையை முட்டி, நான் தவித்த தவிப்பு கண்டு, நீ வாய் விட்டு சிரித்து விட்டாய். தவிப்பு என்னுடையது. அதைத் தாண்டிய குரூர இன்பம் உன்னுடையது. சட்டென்று தலையை சாய்த்து, கிணற்றுள் ஜலத்தைச் சிந்தி, அதில் தெரிந்த கிழல்களைகணத்தில் அழித்து விட்டு மறுபடியும் கக்கடகடவென உன்சிரிப்பு. தவலையை இடுப் பில் ஏற்றிக்கொண்டு, வேணு மென்றே முதுகை என் பக்கம் திருப்பிக் கொண்டு, சொகுசாய் இடுப்பை ஒடித்து ஒடித்து கடந்து போனாய். அக்த நேரத்தை உன் திருமண தினத்தன்று, உன் கடைசி பிரயாணத்தில் உன் வீட்டுக்கிணற்றடிக்கு ே போகும் வழியில் என்மேல் வீசிய பார்வையில், நினைவு மூட்ட முயன்றாயோ? நான் கினைத்துக் கொள்வதுதான். ஆனால் நான் கினைத்துக் கொள்வதன் அகில் மணம் கrத்ரங்கள் வரை எட்டுகிறது. நீ அப்படி என்பக்கம் முதுகைக் காட்டி, வேண்டு மென்றே இடுப்பை ஒடித்து ஒடித்து கடந்து செல்கையில், உன் பின்னலில் குடியிருந்த பூச்சரத்தினின்று ஒரு தாழம் பூ மடல் கிழிசல் பூமியில் உதிர்ந்தது. அதை எத்தனை நாள் எனக்குப் பிரியமான புத்தகத்தில்-பூரீராமகிருஷ்ண பரம ஹம்ஸரின் உபதேச மொழிகள்-பொத்தி வைத்திருந் தேன்-தெரியுமா? அந்தச் சின்னத்திற்கு அந்த இடம் தகுதி தான் என்று அச்சமின்றிச் சொல்வேன். முதல் மோகம், முதல் தாகம், முதல் தாய்மை, முதல் அர்ப்பணம், அம்பாளுக்கே உரித் தானது. உன் கூந்தலினின்று உதிர்ந்த பூ பொய் சொல்லாத பூ. ஆனால் நீ ஏன் பொய்த்தப் போனாய் இருந்து