பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


லர். ச. ரா. 75 பையன் திகைத்தே போனான். 'எனக்கொண்னும் தெரியாதே-' “அவன் இடுப்பு முண்டை அவிழுங்கள்-எங்கேயா வது மறைச்சு வச்சிருப்பான்-' 'பேசாமெ ரெண்டு புளியமிலாறு கொண்டு வாருங் கள்-முற்றத்தில் உலத்தியிருக்கே-வீறு வீறுன்னு வீறினா, பையன் பேசாமே தோட்டைக் கக்கறான்பாம்பு மாணிக்கத்தைக் கக்கற மாதிரி-' இதற்குள் ஒருவர் பிரியமாய், அவனை மடியில் வைத்துக்கொண்டு மிகவும் சாமர்த்தியமாய், சொல்லுடா கண்ணா, எங்கிட்ட மாத்திரம் சொல்-பெப்பர்மிண்டு வாங்கித் தரேன். எங்கே ஒளிச்சு வச்சிருக்கே? உனக்கு என்னத்துக்கு அது? உனக்கு வேறே சாமான் எல்லாம் வாங்கித் தரேன்- “எனக்கு ஒண்னுங் தெரியாது- எனக்கு ஒண்ணுக் தெரியாதே-1' முள்ளிலை மாட்டிக் கொண்ட ஆட்டுக் குட்டியின் அபலைக் குரல் மாதிரி யிருந்தது அவன் கத்தல். கண்கள் பயத்தால் சுழன்றன. • , ககையைக் கெட்டுப் போக்கின மாமி, உடம்பெல்லாம் ஆட்டிக்கொண்டு ஆத்திரத்துடன் அவனிடம் வந்தாள். "ஒண்ணுமே தெரியாதாடா உனக்கு-குழந்தைக்கு ஒண்ணு தெரியுமோ! வாயில் விரலை வச்சால் கடிக்கத் தெரியுமோ?’ என்று சொல்லிக்கொண்டே, அவன் வாயில் விரலை வைத்தாள். அவ்வளவுதான்; பையன் ஆத்திரத் துடன் விரலைக் கடித்துவிட்டான். அவனுள் உறங்கி யிருந்த ஏதோ ஒரு உணர்ச்சியை அவள் அனாவசியமாய்த் தட்டி யெழுப்பிவிடவே, அது உடனே அவனையும் மீறித் தன்னைத் திருப்தி செய்துகொள்ள ஆரம்பித்து விட்டது.