பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கம்பன் கலை நிலை

அகத்திய முனிவரும் இவரது அடிபாவி அருளுபதேசம் பெற்றி ருக்கின்றார்.

‘ கொன்றைச் சடையற்கு ஒன்றைத் தெரியக்

கொஞ்சித் தமிழைப் பகர்வோனே. (திருப்புகழ் 47) என்ற கல்ை சிவபெருமானுக்கும் இவர் தமிழை அறிவுறுத்தி யுள்ளமை தெளிவாம். கவியுணர்விலும் சுவை நுகர்விலும் உயர் சுகியாயிருக்தலால் புலவர் பலரும் முதலில் இவரது புகழை உவ ந்து பாடுவாாாயினர். மனங்கனிந்து இவரைப்பாடினவர் உடனே மதிகலங் கனிந்து அதிபுகழடைந்துள்ளார். பாடினர் பீடுபெற்று வருவதால் ‘பாட்டுவந்து பரிசளிக்கும் பரமன்’ என கின்றார். முத்தமிழை ஆயும் வரிசைக்கா !” (திருப்புகழ் 630) என்று அருணகிரியார் இவரைக் குறித்திருத்தலால் இவர் தமிழை ஆய்ந்து திளைக்கும் தகைமை தெளிவாம்.

உலகில் நிலவுகின்ற எல்லா மொழிகளுக்கும் இவர் தலைவர் ஆயினும் தமிழ் மொழியில் இவரது ஆர்வம் மிகவும் பெருகி யுள்ளது. தமிழ்ப் பாட்டிலும் பாவலர்களிடத்திலும் இவர்ஆவல் கொண்டுள்ளமையை விளக்குதற்குப் பலசான்றுகள் உள்ளன. அவற்றுள் சுவையான கதை ஒன்று அடியில் வருகின்றது.

இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ப் பொய்யா மொழிப் புலவர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் உயர்ந்த கவிஞர். சிறந்த சீலமுள்ளவர். நல்ல சிவபக்தர். நாளும் சிவ பெருமானேக் குறித்துப் பாடிவருவது அவரது வழக்கம். ஒரு நாள் அவர் கனவில் முருகன் கோன்றி என் மீது ஒரு பாட்டுப் பாடுக” என்றார். அவர் விழித்தெழுங்கார். எதியே ஒருவரும் காணுேம். ஆறுமுகன் அருளை வியந்து உளமிக உருகிக் கோழிக் கும்பாடிக் குஞ்சிக்கும் பாடவா ?’ என்று உல்லாசமாகச் செல்ல மொழி பகர்ந்தார். திங்கள் சில கழிந்தன. ஒரு நாள் அய அாருக்குப் போய்விட்டுக் காட்டு வழியே கனியாக அவர் வந்து கொண்டிருந்தார். முருகன் ஒரு வேடனைப் போல் வடிவங் கொண்டு வேலும் கையுமாய் அவர் எதிரே போனர். இடையில் தொங்குகின்ற கொடுவாளேயும் கையிலுள்ள நெடுவேலையும் கண்டு அவர் நெஞ்சம் கலங்கி அஞ்சி கின்றார். இவர் அருகே நெருங்கி நீர் யார் ? ? என்றார். ஐயா! நான் ஒரு புலவன் ; என் பேர்

பொய்யாமொழி ‘ என்று அவர் மெய் பதறி மொழிந்தார்.