பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கம்பன் கலை நிலை

முருகவேள் பாடியது. விழுங்ததுளி அங்தரத்தே வேமென்றும் ; விழின் எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச்-செழுங்கொண்டல் பெய்யாத கானகத்தே பெய்வளையும் போயினளே பொய்யா மொழிப்பகைஞர் போல்.”

தம்போைப் பொதிந்து சீருடன் வந்திருக்கும் இக்கவியைக் கேட்டதும் புலவர் பெருவியப்படைந்து ஐயா ! தாங்கள் எங்க ஆர்’ ? என்றார். என் ஊர் தோகைமலை , ‘ கோழிக்குப் பாடு வதே யன்றிக் குஞ்சுக்குப் பாடாக நீர் இன்று முட்டைக்குப் பாடினிர்! செய்யேன் என்று முன்னம் சொன்ன மொழி தவறிப் பொய்யானமையால் பொய்யாமொழி என்னும் பேர் உமக்கு மிகவும் பொருந்தும் போம்’ என்று புகன்றுவிட்டு இவர்விாைந்து மறைந்துபோனர். புலவர் பெருங் திகிலடைந்து தெளிந்து முருக வேளின் அருளை கினைந்து உருகி யழுதார். அதன்பின் அவச முடன் ஆர்வமீதுார்ந்து ஊர் வந்து சேர்ந்தார். so

இக்கக் கதை எவ்வாருயினும் தமிழில் குமாநாதன் கொண் டுள்ள பிரியநிலையைத் தெளிவுறுத்துகின்றது. இவ்வாலாற்றைக் குறித்து அருணகிரிநாதரும் கம் நூலில் உாைத்திருக்கிரு.ர்.

‘’ முற்பட்ட முரட்டுப் புலவனே

முட்டைப் பெயர் செப்பிக் கவிபெறு பெருமாளே.”

(கிருப்புகழ் 953)

‘ வெருட்டி ஒரு,

வேடுவனுய் ஒர் புலவன் வெண்பாவைக் கைக்கொண்டு கோடு திரியும் குறச்செட்டி (திருத்தணிகையுலா)

கையா றிரண்டுடைக் காளே தன் வாயிற் கவிதைகொண்ட பொய்யாமொழி. (படிக்காசுப் புலவர்)

மேற்குறித்த சம்பவம் இக்காட்டில் நிகழ்ந்துள்ளதும், அதனைப் புலவர்கள் பாராட்டியிருப்பதும் இவற்றால் அறியலாம்.

தமிழ்ப் புலமையைத் தம் அடியவர்க்கு அருளுவதோடு தாமும் கவிபாடி மகிழ்தலால் : காலுகவித் தியாகா ! ’ என இவர் ஞாலம் துதிசெய்ய கின்றார். நூலறிவுடையார் பலரும் வாலறி வுடைய இவரை வழுக்கிக் கவிபாடும் வரம்பெற்றுப் புவிபோற்ற கின்றுள்ளார். இவர் கலையருள்புரியும் கருணை நிலையினர்.