பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கம்பன் கலை நிலை

சுட்டிச் சொல்லும்; உள்ளவரெல்லாருமே மெய்யே பேசுபவர் , மறந்தும் பொய் புகலாதவர் ஆயின், மெய்யுடையார் இவர் என்று அங்கே எவரையும் விதந்து கூறமுடியாது ஆதலால் ‘பொய் உரையிலாமையால், உண்மை இல்லை ‘ என்றார். ‘பொய் என்றால் இன்னதென்றே தெரியாமல் மெய் ஒன்றே பேசும் செவ்விய நாவினயையே அத்திவ்விய தேசம் சேர்ந்திருந்த தென்பதாம். அந்தச் செவ்விய இருப்பை இவ்விதம் உரைத்தார்.

கண்ணே மயக்கி, கயப்பை இயக்கி, வியப்பை யுண்டாக்கும் கைத்திறக்காான் செய்கையைச் செப்படிவித்தை என்பர். கம்பர் இங்கே அப்படிச் செய்திருக்கிரு.ர். உண்டும் என்பதை இல்லை என்று சொல்லி, எல்லாருள்ளங்களிலும் கிகைப்பையும் அதிசயத் தையும் சேர விளைத்து, இந்திாசால சாதுரியத்துடன் அந்த உண்மையை உறுதி செய்து இந்தப் பாட்டில் அவர் காட்டியிருக் கும் காட்சி கண்டுகளிக்க வுள்ளது. செப்பை வைத்துக்கொண்டு வினுேதம் செய்தலால் அது செப்படிவித்தை என வந்தது. செப்பு என்பது சொல்லுக்கும் பேர் ஆதலால் தமது அற்புதச் செப் பாடலைப் பொற்புடன் புரிந்துள்ள இவரது விற்பனத் திறமும் செப்படி வித்தை என்று ஈண்டுச் செப்பிட நேர்ந்தது.

இக்கவியில் முதல் மூன்றடிகளும் ஒரே நிலையில் அமைந்தன. இறுதி அடிமட்டும் வேறுபட்டுள்ளது. வண்மை, திண்மை, உண்மைகள் விரும்பக்கக்கன : வெண்மை வெறுக்கப்படுவது. வெண்மை = அறியாமை. இனமில்லாத அதனே. இங்கு மருவியது ஏன் ?

முன் மூன்றும் மனம் வாக்கு காயம் என்னும் மூன்றிற்கும் இனமானவை ஆதலால் ஓரினமாய்த் தொடர்ந்து நின்றன. மன நிலையை மத்தியில் வைத்துச் செயலையும் மொழியையும் அயலிரு மருங்கிலும் சோ வைத்தார். முக்காணங்களையும் ஒக்க உணர்க் திய பின்னர்ப் பக்கம் ஒன்று சேர்த்துப் பாட்டைப் பூர்த்தி செய்திருக்கிறார். அதன் வேறுபாடு தெரியக்கடைசியில் வைத்து : மேவலால் ‘ என வேறொரு வாய்பாட்டால் கூறியருளினர்.

தான் கற்றதோடு அமையாது பெரியோர்கள் வாயிலாகப் பலவகையான நூற்பொருள்களையும் கேட்டபொழுது தான் ஒரு

வன் அறிவு கிம்பி அடக்கமும் அமைதியும் வாய்ந்து பெருங்