பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 கம்பன் கலை நிலை

எகம்=ஒன்று. தனக்கு கிகரொன்றில்லாதது எகம் என்க. எகன் என்று கடவுளுக்கு ஒரு பெயர். எல்லா உயர் நலங்களுக் கும் கல்வி மூலமுதலாயிருக்கலால் அது எகம் முதல் என எண்ணவந்தது. எகமா நகர் ‘ (சிந்தாமணி) என்புழி எகம்

குறித்து கிற்றலறிக.

கல்வியாகிய வித்திலிருந்து ஒரு இனிய கரு முளைத்து வளர் ந்து, கேள்வியாகிய பல கிளைகள் கிளைத்து நீண்டு, கவமாகிய கழைகள் மிகவும் தழைத்து அடர்த்து, அன்பாகிய அரும்புகள் எங்கனும் அரும்பி அலர்ந்து, புண்ணியமாகிய பூக்கள் பூத்துக் காய்த்து, இன்பமாகிய அரிய பெரிய பழம் ஒன்று பழுத்தது போல் கிருவயோத்தி செழித்துச் சிறந்திருந்தது என்பதாம். எழுவாய் இதில் வருவிக்கப்பட்டது. பழுத்தது எது? என எண்ணி நோக்கி வினை முதலைக் கண்டுகொள்ள நுண்ணிகின் வைத்த படியிது. இனிய ஒரு கனிமாக் காட்சி காண்க.

எழுந்து, போக்கி, தழைத்து, அரும்பி, மலர்ந்து, பழுக் தது என வினை முடிபுகளை இணைத்து நோக்கிப் பொருள் நிலை களைக் கருத்துான்றி யுணர்ந்து கொள்க.”

போகம்=ஐம்புலன்களும் ஆாதுகரும் இன்பம்.

அரிய இனிய வளங்கள் பலகிறைந்து, யாண்டும் இன்ப நல ன்கள் சாந்து, மக்கள் என்றும் குன்றா மகிழ்ச்சியுடையாாய்க் குலாவி வாழும்படி அந்நகரம் கிலவி யிருக்கது. ஆதலால் அங் கிலையினை க் கம் புலமைக் காட்சியில் கண்டு பெரிதும் வியந்து போகம் கனி ஒன்று பழுத்ததுபோலும் ? என்று அதிசயித்து முக்கில் விால் வைத்து விழித்த கண் இமையாமல் விழைந்து நோக்கி விம்மித மெய்தி நம் கவியாசர் துதிசெய்து கிற்கும்

காட்சியை இதில் கண்ணுான்றிக் காண்க.

முன்னம் புண்ணிய நகரம் என்று முதலில் எண்ணியதற்கு ஏற்ப அதன் போகச் சிறப்பை முடி வில் இங்ஙனம் புலப்படுத்தி யிருக்கிரு.ர். போகம் என்ற சொல்லாற்றலால் அங்கு வாழ்பவர் கள் எல்லாரும் அல்லல் யாதும் அறியாமல் எண்ணியன யாவும் இனிது நுகர்ந்து நல்ல சுகிகளாய்ப் போக பூமியிலுள்ளவர்கள் போல் பொலிவெய்தி யிருந்தனர் என்பது பெறப்பட்டது.