பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது அதிகாரம்

தசரதன் தன்மை.

காட்டின் சிறப்பும் நகர்ச்சிறப்பும் கம்பன்றன் பாட்டின் சிறப்போடு பார்த்துவந்தோம்-நீட்டுகொடைக் கையான் தசரதன்றன் காமர் சிறப்புமினிப் . . பொய்யாமல் காண்பாம் புகுந்து.

இது முதல் இனிமேல் காவிய பாத்திரங்களைக் கண்டு மகிழ வந்துள்ளோம். முன்னுற மூலபுருடனேக் கண்ணுறுகின்றாேம். இந்தப்டபாத்திர சோதனை இந்நூலுக்கு ஒர் குத்திரமாகும்.) இன்ப நிலையமான இராம கதைக்கு மூல முதல்வயுைள்ள தசா தனே முதலில் உரிமையுடன் அறிந்து உறுதி பல காண்போம். இவன் அரசர்க்குஅாசன். பல அரசர்களையும் அடக்கி ஆளும் தலை மையுடைமையால் சக்கரவர்த்தி என்னும் மிக்க புகழுடன் இவன் விளங்கியுள்ளான். இவன் சிறந்த மதிநலமுடையவன். நல்ல சுகி. எல்லாக் கலைகளிலும் வல்லவன். வில் வலியில் மிகவும் கைதேர்ந் கவன். குறி எய்வதில் அதி நிபுணன் என்று அக்காலத்திலிருந் தவரெல்லாராலும் வியந்து போற்றப்பெற்றவன். கண்ணெதிரே காணுத பொருளையும் ஒசையை ஒர்ந்து அதனே ஒரேதொடையில் * எய்து வீழ்த்தும் இயல்பினன். அவ்வாறு எய்ய வல்ல அம்பு நிலைக்குச்சத்த வேதி என்றுபெயர். சக்தம்=ஒலி. வேதி=அறிய வல்லது. அந்த அத்திர வித்தையில் இவன் நன்கு சித்திபெற்ற வன். இவனது வில்லாண்மை போர் வல்லார் எல்லாயாலும் போற்றப்பட்டுள்ளது.

“ மனுவாதி மன்னர்பலர் மாண்வலிபெற் றிருந்தாலும் o -- தனுவலியில் தசரதன் போல் தலைசிறந்து கின்றவர் யார்?” என்று வீரர்பலரும் வியந்து பேச இவன் வீறுற்றிருந்தான். பாராளும் மன்னயெவரும் பணிந்து போற்றப் போாண்மையுடன் இவன் சீராண்டு வந்தான். அமாரும் இவனது உதவியை ஆவ லுடன் வேண்டி நின்றார். சம்பரன் என்னும் அசுரைேடு இந் திரன் பலமுறையும் அமராடி யாதும் முடியாமல் அயர்ந்து கின் முன் , முடிவில் இவனிடம் வந்து குறையிாந்து நின்று துணைவா வேண்டினன். இவன் இரங்கிச் சென்று அமர் முகத்தில்