பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கம்பன் கலை நிலை

காட்டின் பராமரிப்பிற்குத் தாயின் பாராட்டைப் பிறரும் உவமை குறித்திருக்கின்றனர். சில அடியில் வருவன :

“ தாயில் துரவாக் குழவி போல

ஒவாது கூஉகின் னுடற்றியோர் நாடே. (புறம் 4) ‘’ நீயொழி காலே கின்ன டெல்லாம் தாயொழி குழவி போலக் கூஉம் துயர்கிலே உலகம் காத்தல் இன்றிc உயர்கிலே உலகம் வேட்டனையாயின். (மணிமேகலை 25) ‘ குழவி கொள்வாரிற் குடிபுறங் தந்து (பதிற்றுப்பத்து 6)

‘’ ஒங்குகுடை நீழல் உலகுதுயில் மடியக்

குழவிகொள் பவரின் இகழாது ஒம்பி (பெருங்கதை, 4-10)

தாய் குழந்தையைக் காப்பதுபோல் அரசன் நாட்டைக் காக்கின் முன் அவன் அன்புடன் காவானுயின், தாயிழந்தகுழவிபோல் நாடு நோயுழந்து வருந்தும் என இவை உணர்த்தியுள்ளனகாண்க. பாணர், சாத்தனர், காக்கைபாடினியார், கொங்குவேளிர் என்னும் பழம் பெரும் புலவர்கள் அரசைக் தாயோடு ஒப்ப வைத்து முறையே இங்ானம் உரைத்திருக்கின்றனர்.

காவல் குழவிகொள்பவரின் ஒம்பு மதி’ எனச் சோலிரும் பொறை என்னும் போாசனை நோக்கி நரிவெரூஉத்தலையார் அருளி யிருக்கிறார், காவல்=காக்கப்படும் தேசத்தை. | (பண்டைக்கா லம் தொட்டே சங்கத்துச் சான்றாேர் இந் நாட்டில் கையாண்டு வந்துள்ள அரசியல் கருத்தைக் கம்பர் இங்கே அன்போடு கலந்து தசரதனுக்குத் தந்திருக்கிரு.ர்.)

மேலே வந்துள்ள பழைய குறிப்புக்களால் பண்டு இக் நாடிருந்த நிலைமையும், அதனை அரசர் ஆண்டுவந்த தலைமையும், அவர்க்குப் புலவர் உழையிருந்து உறுதிமொழிகள் புகன்று உதவி கின்ற தகைமையும் நன்கு புலம்ை. கவிகளின் வாக்கு மூலங்கள் அவரவர் இருந்த கால கிலைமையை ஞாலம் அறியக்காட்டி யருள் கின்றன.

ஒரு குழந்தைக்குத் தாய் எப்படி ஆகாவோ அப்படி ஒரு நாட்டுக்கு அரசன் என்பது இதில் உய்த்துணரவுள்ளது. உரிமை

1. - s