பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கம்பன் கலை திலை

பாதுகாப்பின் பான்மை “ எய்யென எழுபகை எங்கும் இன்மையால்

மொய்பொரு தினவுறு முழவுத் தோளின்ை, வையகம் முழுவதும் வறிஞன் ஒம்புமோர் செய்யெனக் காத்தினி தரசு செய்கின்றான்.’

(அரசியற் படலம் 12) செய் என்றது வயலை. நெல் விளையும் கிலம் ; மிகவும் சுருங் கியது; சிறிய அளவினையுடைய அந்த ஒரே வயல்தான் ஒருவனு க்கு உண்டு ; அவன் பெரிய குடும்பி ; கன் மனைவி மக்களனை வரையும் அதன் வருவாயைக்கொண்டே பாதுகாக்க வேண்டும் ; அக்கிலையிலுள்ள அவன் அவ்வயலை எவ்வாறு கண்னும் கருத்து மாய்க் கருதிப் பண்படுத்திப் பாதுகாத்துவருவானே அவ்வாறே தசரதன் உலக முழுவகையும் உரிமையுடன் ஆதரித்து வந்தான் என்பார், வறிஞன் ஒம்பும் ஒர் செய் என வையகம் முழுவதும் இனிது காத்து அரசு செய்கின்றான்’ என்றார்)

செய்தனன் என இறந்த காலக் கால் கூருமல், செய்கின்றன் என்று காம் நேரே கண்ணெதியே கண்டதுபோல் கவி குறித்தி ருக்கும் கருத்து மிகவும் கருதக்கக்கது.)

நீதி நலம்கனிந்த அந்த அரசாட்சி பல்லாயிர ஆண்டுகளு க்கு முன்னரே நிகழ்ந்ததாயினும் இன்றும் கம் எதிரே நிகழ்வது போல் இக்காவியம் நாளும் காட்டி வருகின்றது.

பெறலரிய பெருங்கிருவுடைய பெரிய சக்கரவர்த்தியை ஒரு வறிஞனேடு ஒப்பவைக்கது பாதுகாப்பில் அவன் கண்ணுான்றி யிருக்கும் கருத்து நிலை தெரிய என்க.

தேகபோகங்களை ஏகபோகமாய் நகர்ந்து யாண்டும் கன்ன லமே கருதிச் செல்வச் செருக்குடன் இறுமாந்திருக்கும் அரசுக் கும் இதற்கும் உள்ள வேறுபாட்டை ஈண்டு எண்ணி நோக்கின் இதன் ஏற்றமும் இயல்பும் எவர்க்கும் எளிது தெளிவாம்.

(ஒர் செய் என்றது வேறே யாதொன்றும் இல்லாமல் அந்த ஒரு காணி கிலமே அவனுக்கு உயிராதாாமாயிருந்தமை உணா என்க.)

பயிர்காக்கும் உழவனையும், உயிர் காக்கும் கிழவனேயும் ஒரு ங்கே காட்டி உழவு நிலையையும், அரசுமுறையையும் நம் உளமிக

மகிழ உணர்த்தியிருக்கும் அழகை இதில் ஊன்றிப் பார்க்க.