பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H

5. தசரதன் தன்மை 271

ஏழும் ஏறப்போய் ஆறும் ஏறினர் (கையடைப்படலம் 23) என்பதும் இந்த வகையில் வந்தது. இவ்வாறு இன்னும் பலவுள.

புலப்புகைகளை வோறு க் கவர் என வசிட்டாது சீர்மையை விளக்கி விட்டுப் பின்பு ருசியசிருங்கரைக் குறிக்கின்றார். கலத்

தின் குலகுருவாதலால் அவரை முதலில் உாைத்தார்.

இருவருக்கும் இதில் கொடுத்திருக்கும் அடைமொழிகளைக் கூர்ந்து கவனிக்கவேண்டும். முன்னவர் பயிற்சியாலும் முயற்சி யாலும் பஞ்சேந்திரியங்களையும் வென்று உயர்ந்தவர் ; பின்னவர் இயற்கையாகவே எல்லா அருந்தவங்களும் எளிதமைந்த திவ்விய ஞானி என்க.

ஞான கலங்கள் யாவும் இயல்பாகவே சுரந்து வேதம் எவ் வாறு தாய்மை மிகுந்து உயர்ந்துள்ளதோ அவ்வாறே தேசு வளர்ந்து இவர் சிறந்துள்ளார் என்பார், அருமறை வடிவு ’’ என்றார். வேதமே இம்மாதவர் உருவமாய் மருவி வந்துள்ள தென்பதாம். இதல்ை இவரது இயல்பும் உயர்வும் இனிது புலனும். ஒளிர் என்றது. தவப்பொலிவினை நினைத்து.

கலக்கோட்டுமுனிவருக்கு இங்கே புதிதாக நம் கவியாசர் ஒரு பெயர் இட்டிருக்கிரு.ர். அது வசிட்டன் என்னும் பேயோடு இசையொத்து விசிக்கிரப் பொருள் கொண்டுள்ளது.

விசிட்டன் என்பதற்குச் சிறந்த ஞான சீலன் என்பது பொருள். சிட்டர் போற்றும் சீரியன் என்றவாறு.

நெறிமுறை வழுவாத நல்ல சில முள்ள பெரியாரை ச் சிட்டர்

H =

என்பர்.)

இதன் எதிர்மொழி துட்டர். சிட்டர் செயல் செய்திலை; * குலச்சிறுமை செய்தாய்’ எனச் சீதையை விட்டுவிடாமல் இருப் பதைக் குறித்து இராவணனை நோக்கிக் கும்பகருணன் இவ்வாறு திட்டியிருக்கிருன்.

“ சிட்டர்தம் தனித்தேவனும் அதனிலே தெரிந்தான்

(இராவணன் வதை-103) சிட்டனே! சிவலோகனே!

(திருவாசகம், திருக்கழுக்குன்றப் பதிகம், 2) “ சிட்டர்கள் துதித்திடும் மகத்துவம்

(மதுரைக்கலம்பகம். 82)