பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

கம்பன் கலை நிலை


கம்பர் சரித்திரம்


கம்பருடைய பிறப்பு இருப்பு வாழ்க்கை வரலாறுகள் முதலியவற்றை அறிந்துகொள்ள யாவரும் விரும்புவர். இவரது சரிதம் உண்மையாகவும் தெளிவாகவும் இதுவரை யாதும் வெளிவரவில்லை. வராமைக்குக் காரணங்கள் பல உள்ளன. சில தெரிவோம்.

ஒருவனுடைய சரித்திரம் உள்ளது உள்ளபடியே பூரணமாக வெளிவருவதற்கு நான்கு உபகரணங்கள் வேண்டும். அவை எவை? எனின், தன் வாழ்நாளில் நிகழ்ந்த அநுபவங்களைத் தினங்தோறும் அவன் கையால் எழுதிவைத்திருக்கும் நாட் குறிப்பு; அவன் காலத் தில் அவனோடு உடனிருந்தவர் அவனைப்பற்றி எழுதியிருப்பன ; வழிமுறையே பரம்பரையாக அவனைக்குறித்து வழங்கி வருபவை ; கல் வெட்டுகள் என்பனவாம். இன்ன வகையான சாதனங்கள் ஒருவனுக்கு உரிமையாக அமையின் அவனுடைய சரித்திரம் தெளிவாக எழுத அமையும். அங்கனம் தக்க ஆதாரங்கள் அமையா வழிக் கற்பனைகளும் யூகங்களும் கலந்து புனைந்து சரிதத்தைக் கலக்கி நிற்கும். கலப்பான அந்நிலையிலுள்ளனவே சரிதங்கள் எனப் பெரும்பாலும் இங்குக் கலித்து வந்துள்ளன.

நம் நாட்டில் இருந்த முன்னோர்களுக்குத் தம் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குறித்துவைக்கும் வழக்கம் இல்லை. ஏடும் எழுத் தாணியும் கொண்டு வருத்தி எழுதவேண்டியிருந்தமையான் உலகிற் குப் பெரும்பயனுடையன என்று தெரிந்தவற்றையே அவர் விரும்பி எழுதுவாராயினர். அரும்பயன் ஆய்ந்த அறிவினையுடையார் பெரும் பயன் தோய்ந்தனவே பேசுவராதலால் அப்பெருந்தகையாளர் அவ் வண்ணம் இருந்துவரலாயினர். அவ்வரவு அந்நாளில் நிறைவாக நிற்பினும் இந்நாளில் குறைவாக நேர்ந்தது. நம்முடைய பெரி யோர்களின் சரித்திரங்களை உண்மையாக அறியவேண்டும் என்று உரிமைமிகுந்து அவாவியுள்ள இக்காலத்தில் ஆதரவான ஆதாரங்கள் காணாமையால் நாம் அலமர நேர்கின்றாேம். நேரினும் நம்மவர் கைசோர்ந்து விட்டபாடில்லை. எட்டினமட்டும் பழஞ் சரிதங்களை இளங்கண் கொண்டு நோக்கி உளங்களிகூர்கின்றார். கூர்ந்தும் உறுதி தெரியாமல் மறுகி யுழல்கின்றார். கருதி யலைகின்றார்.

அரிய இராம சரிதத்தை உலகம் உள்ள அளவும் எவரும் இன்புற எழுதியருளிய கம்பர் தமது இனிய சரிதத்தைச் சிறிதே