பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கம்பன் கலை நிலை


விளங்கியிருந்தார். அவர் பெருஞ் செல்வர் ; அரசுவிழை திருவினர்; கற்றவரிடத்தில் பெருமதிப்பும் பேரன்பும்உடையவர். பெருங் கொடையாளர். பெருந்தகைமை யுடையவர். பிறர்க்கு உதவும் பெற்றியில் தமக்கு நிகரிலராய் அவர் தழைத்திருக்கார். ஆதித்த ஒச்சர் அவரை அடிக்கடி போய்க் கண்டு மகிழ்ந்து வருவர். அங்ஙனம் சென்று வருங்கால் ஒரு நாள் இப்பிள்ளைப் பெருமானையும் உடனழைத்துப் போனார். இளமை தவழ்ந்து எழில்நலம் கனிந்திருந்த இக்குமரனைக் கண்டவுடனே அவ்வள்ளல் பெருமகிழ்ச்சி கொண்டார். உழுவலன்பு உள்ளுற விளைந்தது. பழந்தொடர்புடையவர்போல் ஒருவரை ஒருவர் விழைந்து நோக்கி இருவரும் உளங்கலந்த அன்பில் கிளர்ந்து நின்றார். அன்று முதல் அப்பிள்ளை யினிடமே இப்பிள்ளை பெரும்பாலும் இருந்துவர நேர்ந்தது. இடை யிடையே திருவழுந்தாருக்கும் வருவர்;ஆதித்தனைத் தந்தை என்றே முழுதும் இவர் நம்பியிருந்தமையால் யாதொரு வேற்றுமையுமில்லாமல் சிந்தை மகிழ்ந்து போற்றி வந்தார். ஒச்சன் மகன் என்றே நாடெங்கும் ஒச்சம் ஆயது. ஒச்சர் சாதிக்குக் கம்பர் என்னும் பெயருண்மையால் அப்பெயரானே இவர் அழைக்கப்பட்டு வந்தார். உண்மையில் இவர் முன்னோர்கள் ஆண்டு வந்த நாட்டுக்குக் கம்பநாடு என்று பெயரிருந்தமையால் ஆதித்தன் இவரைக் கம்பநாடர் என அன்புடன் அழைத்துவந்தான். மூலமான பட்டப் பெயரும் இடையே நேர்ந்த ஒட்டுப்பெயரும் ஒன்றாக ஒட்டி இக்கவியரசைச் சுட்டும் பாக்கியம் பெற்று ஊழியும் தேயாத உருப்பெற்று நின்றன. வாழிய அந்நிலை. இவரது அறிவாற்றல்களை அறிந்து வரவரச் சடையப்பருக்கு ஆர்வமீதூர்ந்தது. அவர் சோழமன்னன் சபைக்குப் போய்வரும் உரிமையுடையவராதலால் அவ் வளவனோடு இவ் இளவலுக்கும் தொடர்பு நேர்ந்தது. நல்ல நூல்களின் பயிற்சியும் வல்லார்வாய்க் கேள்விகளும் இவர்க்கு வளமுற வாய்த்தன. இவரது மதிநுட்பமும் கலையறிவும் தேவியருளும் செழித்து வளர்ந்தன. அரசவைக்கு வருகின்ற வேறு முதிய புலவர்களும் இப் புதிய புல வரிடம் உரிமை மீக்கூர்ந்து உறவு கொண்டாடினர். இவரது புலமை நிலையை அறிந்து அரசனும் இவரைத் தலைமையாக ஆதரித்து வந்தான். தந்நிலைமை தெரியாதிருப்பினும் இவரிடம், புலமை வீறுடன் இயல்பாகவே குலவீறும் குடிகொண்டிருந்தது. மன்னன் அவையில் இங்ஙனம் மன்னிவரும் காலத்தே தான் இராமகாதையை