பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தசரதன் தன்மை 435

இவ்வாறு சிறந்த மதியூகிகளும், உயர்ந்த கவஒழுக்கமுடைய வர்களும் விரைந்து வந்து அரசவையில் உரிமையுடன் வான் முறையே அமர்ந்தனர்.

சக்காவர்த்தி சிங்காசனத்தில் சிறந்து விற்றிருந்தான். வசிட் டர் வலப்புறத்தும், சுமந்திரன் இடப்புறத்திலும் அயலே அமர்ந் கிருந்தனர். அமைச்சானைவரும் கிாம்பியிருந்தமையால் அந்தப் போவை அறிவு நிலையமாய்ப் பெருகியிருந்தது.

மன்னர் பிரான் எல்லாரையும் இன்னருளுடன் ஒருமுறை இனிது நோக்கினன். பின்பு தான் எண்ணியுள்ளதை நன்னய மாகப் பேசலானன். அன்று இவன் பேசியிருக்கும் திறம் பெரிதும் வியந்து போற்றத்தக்கது. மது வாசகங்கள் சுரங்து, சதுரப்பாடுகள் கிறைந்து, முதிர்பேரறிவுடன் மருவி மன்னன் பிரசங்கம் மிகவும் இாசமாக மன்னி வந்துள்ளது.

தசரதன் மந்திரிகளை நோக்கிப் பேசியது.

‘ உரிமை மிகுந்த எனது அருமைத் துணேவர்களே! இன்று உங்கள் முன்னிலையில் ஒன்று சொல்ல வங்கிருக்கின்றேன். அது

மிகவும் அருமையுடையது. உரிமை வாய்க்கது. உங்கள் அனை வருக்கும் ஒருங்கே இனிமையா யிருக்கும் என்று நம்புகின்றேன்.

சூரிய குலத்து மன்னர்களாகிய என்னுடைய முன்னேர் கள் நீதிநெறி கவருமல் ஆதியிலிருந்தே இவ்வுலகத்தைப் பாது காத்து வந்திருக்கின்றனர். அந்த வழி முறையில் நானும் வங் தேன். பழம் பெருமை குன்றா மல் உங்கள் உதவியால் அாசு புரிந்திருக்கிறேன். எ னது ஆட்சி உங்களுடைய மதி மாட்சியா லேயே உயர்நலமடைந்து ஒங்கியுள்ளது. நீங்கள் புரிந்து வந்தி ருக்கும் பேருதவிக்கு இம் முழுநீருலகமும் யானும் எழுமையும் கடப்பாடுடையேம். என் இளமை போயது ; கிழமை இப் பொழுது என்பால் கிழமை கொண்டுள்ளது. இந்த நிலைமையில் மேலும் தொடர்ந்து அரச பாரத்தைத் தாங்கி நிற்பது அமைதி யாகுமா ? இதனைப் பரிவு கூர்ந்து உரிமையுடன் விேர் ஒர்ந்து சிந்திக்கவேண்டும். மனிதன் பிறந்து இறந்துபோமளவும் உலக பாசத்திலேயே உழந்துகொண்டிருந்தால், அவன் உயிர்க்கு உறுதி நாடி உய்வது எங்ானம் ? எனது முன் னோனைவரும் ஐம்பது