பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 கம்பன் கலை நிலை

2. மூன்று உலகங்களிலுள்ள கொடிய பகைவனே வரை யும் அடியோடு வென்று வெற்றித் திருவுடன் வீறுபெற்று ப்ெ கின்ற யான் காமம் கோபம் முதலிய அற்பங்களே அடக்காமல் அவற்றிற்கு வசமாய் அடங்கி இழிந்து வாழ்வது மிகவும்.இகழ்ந்து தள்ளத் தக்கது என்பதாம்.

புறப்பகைகளை வென்று புகழ்மீக் கொண்டேன்; அகப்பகை களை வெல்லாமல் அயர்ந்து அலமந்து கிற்கின்றேன் என அரசன் இாங்கிக் கூறியபடி யிது.

டகாமத்தை முதலில் குறித்தது எல்லாத் தீமைகளுக்கும் எது வாய்த் தலைமை பெற்று கிற்கும் அதன் நிலைமை நோக்கி.”

காமமே பிறவிவித் தாகும் கண்ணிலாக் காமமே சிவனடிக் கலப்பு நீக்கிடும் ; காமமே அவத்தையிற் கலக்கச் செய்திடும் : காமமே நரகெலாம் காணி யாக்குமே.” (காசி ரகசியம்) தீமையுள்ளன. யாவையும் தந்திடும் : சிறப்பும் தோமில் செல்வமும் கெடுக்கும்கல் லுணர்வினைத் தொலைக்கும் : ஏம நன்னெறி தடுத்திருள் உய்த்திடும் இதல்ை காமம் அன்றியே ஒரு பகை உண்டுகொல் கருதில். (கந்தபுராணம்)

காமமே கொலகட் கெல்லாம் காரணம் : கண்ணுேடாத காமமே களவுக்கெல்லாம் காரணம் கூற்றம் அஞ்சும் காமமே கள்ளுண்டற்குங் காரணம் : ஆதலாலே காமமே நாகபூமி காணியாக் கொடுப்ப தென்றான்.

(திருவிளையாடற் புராணம்)

காமத்தின் கொடுமை குறித்து வந்துள்ள இவை ஈண்டுக்

சிந்திக்கக் கக்கன. இதல்ை அது முக்கி கிற்க வந்தது.

கள்ளரில் காந்து உள் உறை பகை என்றது காமம் முதலிய வற்றின் இருப்பும் இயல்பும் தெரிய வந்தது. உள்ளிருந்து கொண்டே உள்ளத்தையும் உணர்வையும் கெடுத்து உயிரை அலைக் கழித்து வருதலால் உட்பகை என அவை பெயர் பெற்றுள்ளன . 1கைகள் என்னது பகைஞர் என உயர்திணையில் கூறியது எவ ரும் எளிதில் வெல்லுதற்கரிய திறலுடன் வீறுபெற்றுள்ள அவற்றின் வியத்தகு கிலைகளையும் விறல்களையும் உணர்ந்தென்க.