பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கம்பன் கலை நிலை

“அவை யிடக்கியலே அரில்தபத் தெரியின்

வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்று

எல்லா மாந்தர்க்கும் வழிமொழிங் தன்றே.’

(தொல்காப்பியம்)

விதித்துள்ளார்.இதில் எல்லாக் கவிஞர்க்கும் என்னுது மாந்தர்க்கு என்றது அவையிலும் அவனியிலும் உள்ள மாக்கானேவரையும் ஒருங்கே ஒர்ந்து கொள்ள என்க.

வல்லா என்றது வல்லமை யில்லாதன என்றவாறு. கருதி யதைத் தெளிவுறச் சொல்லமாட்டாமல் சொல்லிலும் பொருளி லும் மெல்லியனுய்ப் புல்லியன கூறினும் அவற்றையும் அளிபுரிந்து கேட்டு மேலோர் அமைதிகொள்ளுமாறு நூலோன் வழிபாடு செய்து பணிமொழி கூறுவதே அவையடக்கமாம்என்பது'வல்லா கூறினும், வழிமொழிக்கன்றே என்பகல்ை அறிய கின்றது.

உலகில் பல்வேறிடங்களில் பாவியுள்ள அறிஞர்களும் கவி ஞர்களும் ஒரிடத்தே ஒருங்கே குழுமி நேர்முகமாய் இருப்பகாக நினைத்துகொண்டு நூல் செய்யும் புலவோர் தம் நூல் முகப்பில் அவையடக்கம் சொல்வது மாபாய் வந்தது.

அம் முறையில் கம்பர் இங்கே அவையடக்கம் கூறியிருக்கின் முர். அவரது அடக்க நிலையின் அமைதியை அடியில் பார்க்க.

அவையடக்கம்

ஒசை பெற்றுயர் பாற்கடல் உற்முெரு

பூசை முற்றவும் கக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற் றேன் மற்றிக்

காசில் கொற்றத் திராமன் கதையரோ. (1)

என்று நூலோடு தமக்குள்ள வாசியை விளக்கி அறிஞர்க ளிடம் முதலில் நேசமுடன் இங்கனம் ஆசிகர வேண்டுகின்றார்,

பாற்கடல் இராம.ககைக்கும், பூனே கம்பருக்கும் இதில் ஒப்பாய் வந்தன. அளவிடலரிய பெருமை இனிமை மகிமை புனிதம் முதலிய உயர் கலங்களெல்லாம் இயல்பாக அமைந்து

பாற்கடல் என்று குறித்தார். இதல்ை அவரது அாற்கடல் நிலைமை புலனும்.