பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கம்பன் கலை நிலை

முறைப்படி அமைய வில்லையே என்று அவரைச் சீறி வெறுப் பகுே ? குழந்தைகள் செயலை நோக்கிச் சிரித்துப் போவனே அன்றி மறுத்தொன்றும் செய்யான்; அது போல் எனது நூலமைப்பு நான்முறைப்படி அமையவில்லை என்று மேலோர் மாறு கூருர்; மகிழ்ந்தே செல்வர் என்பதாம்.

மடப்பிள்ளைகள் என்பதில் இருபொருள்கள் மருவியுள்ளன. மடம், இளமையையும் அறியாமையையும் குறிக்கும் ஆதலால் சிறு பிள்ளைகள் எனவும், அறியாமை யுடையவர் எனவும் பொருள் பயந்து கின்றது. காய்வாோ ? முனிவரோ ? என்றது காயார்,

முனியார் என்பதாம்.

இறை = அணு. கடுகு, தினை என்பன போலச் சிற்றளவுக்கு அது ஒர் உவமையாய் வந்தது. உள்ளம் கையில் உள்ள சிறு கோடுகளுக்கும் இறை என்று பெயர்.

இறையளவேனும் ஞானம் இல்லாத எனது புல்லிய கவியை முறையான நூலுணர்வுடையார் முனியார் என்ற இதில் ஒர் தொனிப்பொருள் உள்ளது.

சிறிதும் அறிவு நலம் கனியாக வறிய கிலேயி லெழுந்த எனது மென் கவிகள் பெரிதும் அறிவு கிறைந்தவர்க்கும் பேரு வகை தரும் என்பதாம். கண்ணுான்றி நோக்காமல் பாாமுக மாய்ப் பாடிய கவிகளே அறிஞர்களுக்கு அவ்வாறு பேரின்பம் செய்யுமாயின் கருத்தான்றிக் கவனித்துச்செய்த இன்கவிகள் அவனிக்கு எவ்வாறு இன்பம் தரும் ? என்பது குறிப்பு.

இறையும் என்பதில் உம்மை இழிவு சிறப்பு. ஞான சூனிய னை நான் வான சூரியன் போன்ற ஒரு மான வீரன் கதையைப் பாடப் புகுந்தேனே ! இது எவ்வளவு மடமை காரிய மூலமே இப்படி நகைக்கு இடமா யுள்ளபொழுது அதன் விளைவினை ஆாாய நுழைவது பெரிதும் பிழையாவதோடு பெருஞ் சிரிப்பும் ஆகும் ஆதலால் உணர்வுடையார் இதனை உணர்ந்து ஒதுங்கிக் கொள்வார் என்பதாம். உணர்வு=கலை கிறைந்த பேரறிவு.